மழைக்காலத்தில் துணி துவைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க !





மழைக்காலத்தில் துணி துவைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க !

0

பொதுவாக மழைக்காலம் நன்கு குளிராக இதமாக தான் இருக்கும், இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் என்கிற உணர்வு கூட ஏற்படும்.

மழைக்காலத்தில் துணி துவைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க !
ஆனால் இல்லத்தரசிகளுக்கு தான் மழைக்காலம் வந்தாலே கவலையும் கூட சேர்ந்து விடும்.  ஏனெனில் மழைக்காலத்தில் துணிகளை காய வைப்பது அவர்களுக்கு மிகப்பெரிய டாஸ்க், சில பேச்சிலர்களுக்கும் இது சிரமமான ஒன்று தான்.

மழைக் காலத்தில் பல தடைகளையும் தாண்டி துணி சிறிது காய்ந்தாலும் கூட அடுத்த மழை வந்து துணிகளை நனைத்து விடும். கீழே கொடுத்துள்ள வழிகளை முயற்சி செய்து பாருங்கள்.

நாம் அனைவரும் துணிகளை துவைத்து மடித்து வைப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளோம். அதுவும் வெயில் காலத்தில் துணிகளை துவைத்தால் அது ஈசியாக காய்ந்து விடும். 

பாதாமுக்கு பதில் இதை ஊற வைத்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் !

எந்த கிளைமேட்டாக இருந்தாலும் துணி துவைக்காமல் நம்மால் இருக்க முடியாது. ஆனால் மழைக்காலத்தில் துணி துவைத்து காய வைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். 

காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் சூரிய ஒளியும் அவ்வளவாக இருக்காது. இவ்வளவு தடைகளையும் தாண்டி துணி சிறிது காய்ந்தாலும் கூட அடுத்த மழை வந்து துணிகளை நனைத்து விடும். 

சரி எப்படி தான் மழைக்காலத்தில் துணியை காய வைப்பது என யோசிக்கிறீங்களா.? கீழே கொடுத்துள்ள வழிகளை முயற்சி செய்து பாருங்கள்.

துணிகளை துவைக்கும் முன்னர் உங்கள் வாஷிங் மெஷின் சுத்தமாக இருக்கிறதா என்பதை கண்காணிப்பது நல்லது. 

ஏனெனில் சுத்தமில்லாத வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்தால் பாக்டீரியாக்கள் துணிகளில் ஒட்டிக் கொண்டு துர்நாற்றம் வீச தொடங்கி விடும்.  

வினிகர் அல்லது பேக்கிங் சோடா போன்றவற்றை போட்டு மெஷினின் உள்புறத்தை சுத்தம் செய்த பின்னர் துணிகளை சலவை செய்ய போடலாம்.

மழைக்காலத்தில் துணி துவைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க !

பள்ளி சீருடை அல்லது அலுவலகத்திற்கு போட பயன்படுத்தப்படும் துணிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து சீக்கிரமாக துவைத்து உலர்த்தும் முயற்சியில் இறங்குங்கள். 

மற்ற துணிகளை காலநிலை சற்று மாற தொடங்கியதும் துவைத்து உலர்த்தி கொள்ளலாம்.  நீங்கள் போட்டிருக்கும் துணிகளில் ஒரு இடத்தில்  கறை ஏற்பட்டால் துணி முழுவதையும் துவைக்காமல், கறை படிந்த இடத்தை மட்டும் அலசுங்கள். 

இதனால் துணியை நீங்கள் சீக்கிரம் உலர்த்தி விடலாம்.  உள்ளாடைகளை சுத்தமாக துவைத்து நன்கு உலர்த்த வேண்டியது அவசியம், மழைக்காலத்தில் இந்த ஆடைகளை காய வைப்பது சற்று கடினம் தான்.  

அதனால் விலையுயர்ந்த ப்ராவை பயன்படுத்துபவர்கள் ப்ரா வாஷ் பேக்கில் அதனை போட்டு வாஷிங் மெஷினில் சலவை செய்யலாம், இதற்கு கொடுத்தால் தண்ணியும் தேவைப்படாது விரைவில் காய்ந்து விடும்.

இரண்டு ரயிலில் ஒரே டிக்கெட்டை பயன்படுத்துவது எப்படி? தெரிஞ்சிக்கோங்க !

துணிகளை துவைப்பதற்கு முன்னர் 30 நிமிடங்கள் சோப்புத்தூள், வினிகர் அல்லது பேக்கிங் சோடா கலந்து ஊறவைத்து பின்னர் துவைப்பதன் மூலம் துணிகளிலுள்ள அழுக்குகள் போவதோடு மழைக்காலத்தில் துணிகளில் வீசக்கூடிய துர்நாற்றங்களும் இல்லாமல் போய்விடும்.

துணியை காயப்போடும் சிறிது நேரம் தண்ணீரை நன்றாக கொடி கயிற்றில் போட்டு வடிய விடுங்கள். அதன் பின்னர் முடிந்த வரை தண்ணீரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நன்றாக பிழிந்து விட்டு காயப்போடுங்கள். 

துணி காயும் நேரம் கட்டாயம் குறையும். வீட்டில் டேபிள் ஃபேன் இருக்கும் பட்சத்தில் துணிகள் மீது படுமாறு வைத்தால் சீக்கிரம் காய்ந்து விடும். வீட்டில் ஹீட்டர் இருந்தால் காய வைப்பது இன்னுமே எளிது.

மழைக்காலத்தில் துணி துவைக்க இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க !

அவசரமாக ஏதேனும் ஒரு ட்ரெஸை நீங்கள் காய வைக்க வேண்டும் என்றிருந்தால் இந்த மெத்தட் உங்களுக்கு உதவலாம். ஹேர் ட்ரையரை கூல் செட்டிங்கில் வைத்து குறைந்தது 6 இன்ச் இடைவெளியில் துணிகள் மீது காட்டி காய வைக்கலாம்.

சொட்ட சொட்ட நீர் வடியாமல் சிறிது ஈரமாக இருக்கும் போது இதை நீங்கள் முயற்சிக்கலாம். மிதமான சூட்டில் ஈரத்துணியை அயன் செய்தால் துணி காய்வது மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கும்.

டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்கனுமா? நல்லா சாப்பிடுங்க !

என்ன தான் வீட்டினுள் ஃபேனுக்கு அடியில் காயப்போட்டாலும் மழைக் காலங்களில் காற்றில் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். அப்படி இருக்க டீஹ்யுமிடி ஃபையரை பயன்படுத்தினால் ஈரப்பதத்தை போக்க முடியும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)