சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன?





சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன?

0

ஒரு முறை சமைத்த ரசத்தை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது என்று அந்தக் காலத்தில் பாட்டி கூறுவதை கேட்டு இருக்கிறேன். அப்போ தெல்லாம் அவ்வபோது சமைத்த உணவை சாப்பிடுவது தானே வழக்கம். 

சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன?
ஆனால் சமைத்த உணவை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவ தென்பது இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது. அதற்கான தொடக்கம் குளிர் பதனப் பெட்டி, மைக்ரோ வேவ் அடுப்பு என்று எங்கும் கிடைக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள். 

ஒரு முறை சமைத்த உணவை மீதி வைத்து மீண்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடுவது என்பது நிறைய வீடுகளிலும் வழக்கமாகி விட்டது. ஆனால் சில உணவுகளை திரும்பவும் சூடு பண்ணி உண்பது ஆபத்தானது என்கின்றனர். 

ஹரியாலி சமோசா செய்வது எப்படி?

அவற்றில் சில:

பசலைக்கீரை, கேரட், செலரி, டர்னிப் போன்ற நைட்ரேட் சத்துக்கள் அதிகமுள்ள காய்கறிகளை மீண்டும் சூடு படுத்தினால் அவை புற்றுநோய் காரணிகள் ஆக மாறி வெளிப்படும் அபாயம் உள்ளது. 

பசலைக் கீரையில் உள்ள இரும்பு சத்தானது மீண்டும் மீண்டும் சூடானால் ஆக்ஸிஜனேற்றம் நடந்து தேவையில்லாத Free radicals உருவாகும்.

மீண்டும் சூடாக்கினால் சமைத்த சோறு கூட விஷமாகி விடும். இந்த தகவல் ஆச்சரியம் அளிக்கிறது தானே! அரிசியில் இருக்கும் (Bacillus Cereus என்ற) பாக்டீரியா சமையல் சூட்டில் அழிந்து விடும். 

ஆனால் அதன் இனப் பெருக்கி உயிரிகள் (spores) அப்படியே இருக்கும். அவை நேரம் செல்லச் செல்ல பல்கிப் பெருகி உணவை விடமாக்கி விடும். 

சமைத்த சோறு இரண்டு மணி நேரம் ஆவதற்குள் சாப்பிட்டு விட வேண்டும் அல்லது மீதமான உணவை குளிர் சாதன பெட்டியில் வைத்து பிறிதொரு முறை சூடு பண்ணி சாப்பிடுவதாக இருந்தாலும் சூடு செய்ததுமே சாப்பிட்டு விட வேண்டும்.

முட்டைகளை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் அதன் அதிகமான புரதச்சத்தில் உள்ள நைட்ரஜன் ஆக்ஸிஜனேற்றம் ஆகி புற்று நோய் காரணிகள் உண்டாகும். 

சமைத்த முட்டைகளை ஆறியிருந்தாலும் பரவாயில்லை என்று அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. கோழிக்கறியும் அவ்வாறே! சூடு பண்ணி சாப்பிட்டால் அதன் புரதச்சத்து உருமாறி வயிற்றுக் கோளாறு ஏற்படுத்தி விடும்.

உருளைக்கிழங்கையும் சூடு பண்ணி சாப்பிடக் கூடாது. அதிலுள்ள சத்துக்களான விட்டமின் பி6, பொட்டாசியம், விட்டமின் சி இவை யெல்லாம் உடலுக்கு நல்லது தான். 

ஆனால் அடிக்கடி சூடு செய்வதால் நேரம் செல்லச் செல்ல இவை கெடுதல் செய்யும் ஒரு வகை பாக்டீரியா வளர்ச்சியை அதிகமாக்கி பொட்டுலிசம் என்னும் அபாயகரமான நோய் ஏற்படுத்தி விடும்.

கேக் செய்ய பேக்கிங் ஓவன் தேவையில்லை குக்கரில் செய்வது எப்படி?

காளான்கள் புரதச்சத்து மிக்கவை என்பதால் மீண்டும் சூடு படுத்தினால் சிதைந்து வயிறு கோளாறு ஏற்பட்டு விடும். குளிர் சாதனை பெட்டியில் வைத்து பிறகு சாப்பிட நேர்ந்தாலும் சூடாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.

சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன?
செக்கு எண்ணெயாகத் தயாரிக்கப்படும் ஒமேகா 3 வகைக் கொழுப்பு சத்துக்கள் மிகுந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆளி விதை எண்ணெய் போன்றவற்றை 

சமையலுக்கு பொரிக்கும் அளவிற்கு சூடாக்குவது மிகவும் தவறு. சூடாக்கினால் அவை சிதைந்து கெட்டு வயிற்றையும் கெடுத்து விடும். 

இவற்றை முடிந்தவரை குளிர் பதன பெட்டியில் வைத்து சமைக்காமல் சாப்பிடும் சாலட் போன்றவற்றில் பயன்படுத்தலாம். பாக்டீரியா உருவாகி சிக்கு வாசனை வராமல் தடுக்கப்படும்.

பப்பட் ஃபிளிட்டர்ஸ் செய்வது எப்படி?

அவ்வப்போது தேவைப்படும் அளவிற்கு மீதம் ஏற்படாமல் அளவாக சமைத்த உணவை சாப்பிடுவது நல்லது. 

நேரக் குறைவு காரணத்தினால் அதிகம் செய்து வைத்து பிறகு சாப்பிட நேர்ந்தாலும் மேற்கண்ட எச்சரிக்கைகளைக் கடைப் பிடிக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)