மாதம் 2 முறை ஆட்டு மூளை சாப்பிட்டால் என்ன நடக்கும்? தெரியுமா?





மாதம் 2 முறை ஆட்டு மூளை சாப்பிட்டால் என்ன நடக்கும்? தெரியுமா?

0

அசைவ பிரியர்கள் அனைவருமே ஆட்டுக்கறியை விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டுக் கறியை மட்டுமின்றி, ஆட்டின் தலை, ஈரல், குடல், மூளை என்று அனைத்து உறுப்புக்களையுமே விரும்பி சாப்பிடுவார்கள். 

மயங்கி விழும் ஆசிரியர்கள்... அன்புமணி ராமதாஸ் கேள்வி !
இவை அனைத்துமே மிகவும் சுவையாக இருப்பதோடு, ஏராளமான சத்துக்களையும் கொண்டது. இதுவரை நாம் ஆட்டின் இறைச்சி, தலை, ஈரல், குடல், கால் போன்றவற்றை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் குறித்து கண்டோம்.

இன்று நாம் பார்க்கப் போவது, ஆட்டின் மூளையைக் குறித்து தான். ஆட்டு மூளையில் இரும்புச்சத்து, புரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகமாகவும், கார்போ ஹைட்ரேட்டுகள் குறைவாகவும் உள்ளன. 

இது சற்று மெட்டாலிக் சுவையைக் கொண்டது என்பதால், நன்கு மசாலா பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ஆனால் ஆட்டு மூளையில் கொலஸ்ட்ரால் மிகவும் அதிகம். அதுவும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மிகவும் அதிகமாக உள்ளன. 

எனவே ஆட்டு மூளையை அடிக்கடி சாப்பிடாமல் மாதம் இரண்டு முறை, அதுவும் அளவாக சாப்பிடலாம். ஆனால் கொலஸ்ட்ரால் மற்றும் பிபி பிரச்சனை உள்ளவர்கள், இதைத் தவிர்ப்பது நல்லது. 

ஏனெனில் இதில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இப்போது ஆட்டு மூளையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

உடலில் உடையே இல்லாமல் தலையணை வைக்கும் பில்லோ சேலஞ்ச் !

மூளை ஆரோக்கியம் மேம்படும்

மாதம் 2 முறை ஆட்டு மூளை சாப்பிட்டால் என்ன நடக்கும்? தெரியுமா?
ஆட்டு மூளையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இவை மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையான மிகவும் முக்கியமான சத்தாகும். 

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், இதய நோயின் அபாயம் குறையும் மற்றும் இரத்தம் உறைவது தடுக்கப்படும். 

மேலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவி புரிகின்றன. எனவே ஆட்டு மூளையை உட்கொண்டால், மூளை மட்டுமின்றி, இதய ஆரோக்கியமும் மேம்படும்.

தசைகளுக்கு நல்லது

ஆட்டு மூளையில் மெலிந்த புரோட்டீன் அதிகமாக உள்ளது. புரோட்டீனானது அமினோ அமிலங்களால் ஆனது. இது தசைகள் மற்றும் திசுக்களின் கட்டுமானத் தொகுதிகள் ஆகும். 

புரோட்டீன் உணவுகளை உட்கொண்டால், தசைகளில் உள்ள காயங்கள் குணமாவதோடு, தசைகளின் வளர்ச்சியையும், வலிமையையும் மேம்படுத்தும்.

நரம்பு மண்டலத்திற்கு நல்லது

மாதம் 2 முறை ஆட்டு மூளை சாப்பிட்டால் என்ன நடக்கும்? தெரியுமா?
ஆட்டு மூளையில் வைட்டமின் பி12 ஏராளமான அளவில் உள்ளன. வைட்டமின் பி12 சத்தானது, உடலின் பல முக்கியமான செயல்பாடுகளை ஆதரிக்கும் ஒரு முக்கியமான சத்தாகும். 

குறிப்பாக இது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு அவசியமான ஒன்று. ஏனெனில் இந்த வைட்டமின் நரம்புகளில் பாதுகாப்பு உறைகளை உருவாக்க உதவுகிறது.

அதோடு வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த வைட்டமின் உடலில் குறைவாக இருந்தால், அது இரத்த சோகை, உடல் சோர்வு, நரம்பியல் பிரச்சனைகள் போன்றவற்றை உருவாக்கும். 

ஆட்டு மூளையை சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின் பி12 போதுமான அளவு கிடைக்கும்.

ஸ்வீட் கார்ன் ஸ்ப்ரவுட்ஸ் சாலட் செய்வது எப்படி?

இரத்தத்தை அதிரிக்கும்

ஆட்டு மூளையில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் காணப்படுகிறது. இரும்புச் சத்தானது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாத சத்தாகும். 

மேலும் இரும்புச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கும், டிஎன்ஏவின் தொகுப்புக்கு உதவுகிறது. 

எனவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் ஆட்டு மூளையை சாப்பிட்டால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

செலினியம் அதிகம்

மயங்கி விழும் ஆசிரியர்கள்... அன்புமணி ராமதாஸ் கேள்வி !
ஆட்டு மூளையில் செலினியம் என்னும் கனிமச்சத்து உள்ளது. இந்த செலினியம் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. 

தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஆதரிக்கிறது, டிஎன்ஏ உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.

முந்திரி பருப்பு பட்டர் செய்வது எப்படி?

ஆண்களுக்கு நல்லது

ஆட்டு மூளையில் ஜிங்க் சத்து அதிகமான அளவில் நிறைந்துள்ளன. ஜிங்க் சத்தானது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. இச்சத்து குறைபாடு ஏற்பட்டால், விந்தணுக்களின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். 

எனவே ஆட்டு மூளையை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படும். அதோடு, ஜிங்க் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)