சமையலறையில் எறும்பு, புச்சி தொல்லையா.. விரட்டி அடிக்க டிப்ஸ் !





சமையலறையில் எறும்பு, புச்சி தொல்லையா.. விரட்டி அடிக்க டிப்ஸ் !

0

மழைக்காலம் வந்து உள்ளதால், பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. மழைக்குப் பிறகு பூச்சிகள் வீட்டிற்குள் வர ஆரம்பிக்கும். வீடுகளில் எறும்புகள் படை எடுக்க ஆரம்பித்து விட்டால், வரிசை வரிசையாக வந்த நிற்கும். 

சமையலறையில் எறும்பு, புச்சி தொல்லையா.. விரட்டி அடிக்க டிப்ஸ் !
நீங்கள் என்ன தான் எறும்பு சாக்பீஸ், சிமெண்ட் அடைப்பு போன்ற முயற்சிகளை மேற்கொண்டாலும், அதையும் துளைத்துக் கொண்டு வந்து விடும். 

இந்தப் பூச்சிகளால் பல தோல் நோய்கள் ஏற்படத் தொடங்குகின்றன. இந்த தீராத எறும்பு தொல்லையை சுலபமான முறையில் எப்படி தீர்ப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

புளித்த ஏப்பம் வயிற்று பிரச்னையின் அறிகுறி தெரியுமா? #Alert

இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களைக் காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. இதனிடையே சமையல் அறையில்  உள்ள பூச்சிகளை வெளியேற்ற பின்பற்ற வேண்டிய முறைகளை தெரிந்து கொள்வோம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களைக் காப்பாற்ற பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ளது. சமையல் அறையில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற பின்பற்ற வேண்டிய முறைகளை தெரிந்து கொள்வோம்.

மிளகுக்கீரை என்பது இயற்கையான பூச்சி விரட்டியாகும், இது எறும்புகள் மற்றும் கொசுக்கள் போன்ற பிற பூச்சிகளை கொல்லும் திறன் கொண்டவை. 

ஒரு சுத்தமான பிளாஸ்டிக் ஸ்ப்ரே பாட்டிலில் 2 கப் தண்ணீருடன் 10 முதல் 20 சொட்டு மிளகுக்கீரை அத்தியாவசிய எண்ணெயை கலக்கவும்.

உங்கள் வீட்டின் கதவுகள்  மற்றும் ஜன்னல்களைச் சுற்றி கலவையை தெளிக்கவும். குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் போன்றவற்றிற்கு எட்டாதவாறு வைத்திருங்கள், அவை வெளிப்பட்டால் மிகவும் நோய்வாய்ப்படும்.

எண்ணெயை தண்ணீரில் கலந்து சமையலறை மற்றும் அறைகளில் தெளித்தால் கிருமிகள் வெளியேறும். அது மட்டுமின்றி புதினாவையும் அதில் தெளித்தால் பூச்சிகளை அழிந்து விடும்.

வீட்டில் எறும்புகள் படையெடுக்க ஆரம்பித்து விட்டால், உடனே அதன் துளைகளில் சிறிதளவே மிளகு தூள்  மற்றும் மஞ்சள் தூள் போட்டு விடுங்கள். அப்படி செய்தால், அந்த இடத்தில் எறும்புகள் வரவே வராது. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.

குளிர் காலத்தில் வரும் இருமலுக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் !

வீட்டில் உள்ள பூச்சிகளை விரட்ட துளசி இலைகளை பயன்படுத்தலாம். இதற்கு துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்ப வேண்டும். 

சமையலறையில் எறும்பு, புச்சி தொல்லையா.. விரட்டி அடிக்க டிப்ஸ் !

இதற்குப் பிறகு, பூச்சிகள் இருக்கும் இடத்தில் தெளிக்கவும். துளசி செடியை வேண்டுமானால் சமையல் அறையில் வைத்து கொள்ளலாம்.

பிரியாணி இலையை அரிசி மற்றும் பிற தானியங்களின் வைத்தால் பூச்சிகள் அவற்றில் நுழைவதை தடுக்கிறது. இந்த இலைகளின் வாசனை மிகவும் வலுவானது என்பதால், இதன் காரணமாக பூச்சிகள் ஓடிவிடும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எழுமிச்சை சாறு எறும்புகளை கொல்லும் சிறந்த முறையாகும். எனவே, வீடு துடைக்கும் பொழுது இவற்றில் இருந்து ஒரு மூடி பயன்படுத்தினால் தரைப்பகுதியும் சுத்தமாக பளிச்சிடும். எறும்பும் வரவே வராது. 

நமக்குள் சோம்பேறித்தனம் வளர நாம் அனுமதிக்கலாமா?

எறும்புக்கு வெள்ளரிக்காய் மிகப்பெரிய வில்லன். சமையல் அறையில் எறும்புகள் அதிகமாக இருந்தால், சில வெள்ளரி துண்டுகளை அங்கே வைக்கவும். எறும்புகள் அங்கிருந்து ஒடி விடும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)