கேஸ் சிலிண்டர்களின் பயன்பாடுகள் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. எனினும், சிலருக்கு எப்படி கேஸ் சிலிண்டரை பயன்படுத்த வேண்டும் என்பது அறியாமல் உள்ளனர். அதற்கான குட்டி டிப்ஸ் தான் இது.
பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்து உபயோகிக்க வேண்டும். இதில் பெரிதும் கவனம் செலுத்துவது, ரப்பர் குழாய்கள் விஷயத்தில் தான்.
ஐஎஸ்ஐ முத்திரை உள்ள அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடுப்பை அணைக்கும் போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடி விட்டு, அதற்கு பிறகே வால்வை மூடுவது நல்லது.
தனிமைப்படுத்துதல் மன ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்க !
அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு, சிலிண்டரை மாற்ற வேண்டும். ஏதாவது பழுது என்றால் நாமே அதை சரி செய்ய முயற்சிக்க கூடாது.
அதே போல, கேஸ் உபகரணங்களை ரிப்பேர் செய்வதற்காக, வேறு யாரையும் அனுமதிக்கவும் கூடாது. விற்பனை யாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும்.
கேஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாக கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்து விட வேண்டும்.
சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து கேஸ் கசிவை தடுக்கும். ஆனால், அனைத்து கேஸ் சிலிண்டர்களுமே சிவப்பு நிறத்தில் உள்ளதே.. ஏன் தெரியுமா?
சிவப்பு என்பது ஆபத்தை குறிக்கக் கூடியது. ஆபத்து உள்ள இடங்களி லெல்லாம் சிவப்பு நிறத்தில் ஏதாவது சிக்னலை பயன்படுத்துவது வழக்கம். துணி அல்லது பலகை இப்படி பயன்படுத்தப் படுகிறது.
சிறிய அளவு கசிவு என்றாலும், பெருத்த நஷ்டத்தை தந்து விடும்.. அதனால் தான், சிவப்பு நிறம் கேஸ் சிலிண்டருக்கு பயன்படுத்தப் படுகிறது.
லாக்டவுனில் குழந்தைகளை சமாளிக்க என்ன செய்யலாம்?
அது மட்டுமல்லாமல், தொலைவான தூரத்தில் இருந்து பார்த்தாலும், சிவப்பு நிறம் பளிச்சென தெரியும். அதனால் கூட, சிவப்பு நிறம் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.
இந்த சிவப்பு நிறத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டவே, வணிக பயன்பாடு சிலிண்டருக்கு நீலநிறம் தரப்பட்டுள்ள தாகவும் சொல்கிறார்கள்.