மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் என குறிப்பிடும் பொருட்களில், வீட்டில் அவசியம் இருக்க வேண்டிய பொருட்களிலும் உப்பிற்கு முக்கியமான இடம் உண்டு.
உப்பை கடனான கொடுக்கக் கூடாது என வீடுகளில் சொல்வதுண்டு. உப்பினை இரவல் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது என்பார்கள்.
அடிக்கடி கை. கால் மரத்து போவதற்கான காரணங்கள் !
அதே சமயம் கிரகப்பிரவேஷம் போன்ற சுப காரியங்கள் செய்யும் போதும் சரி, வீட்டில் திருஷ்டி கழிப்பதாக இருந்தாலும், கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதாக இருந்தாலும் சரி உப்பினை முக்கிய பொருளாக பயன்படுத்துவார்கள்.
இந்துக்களின் நம்பிக்கைபடி உப்பு, மங்கலகரமான பொருளாக பார்க்கப் படுகிறது. நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு விஷயங்களிலும் அறிவியல் கலந்து இருக்கிறது.
சொல்லப் போனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலகட்டத்தில் கூட ஒவ்வொன்றையும் தெளிவாக புரிய வைத்துள்ளனர்.
நமக்கு.ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாகரிகம் என்ற பெயரில் நமக்கு நம் முன்னோர்கள் சொன்ன அறிவியல் சார்ந்த விஷயங்களை நாம் அற்பமாக எண்ணி அவற்றை பின்பற்றுவதில்லை அல்லது மறந்து விடுகிறோம்.
உப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். நம்மைப் பொறுத்தவரை இது வெறும் உப்பு தான். ஆனால் இதில் நம் ஆரோக்கியத்திற்கு தேவையான அயோடின் இருக்கிறது தெரியுமா?
நம் உடலுக்கு தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்று அயோடின் ஆகும். உடலில் அயோடின் சரியான அளவு இல்லாததால் தான் தைராய்டு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
பொதுவாகவே தைராக்ஸின் என்ற ஹார்மோன் மனிதனின் உடல் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றம் சீராக இருக்க இது உதவுகிறது.
அந்த வகையில் அயோடின் தான் இந்த தைராக்ஸின் ஹார்மோன் செயல்பட பெரிதும் உதவுவது. இப்படி முக்கியமாக விளங்கும் அயோடின் உப்பில் தான் இருக்கிறது.
அந்தரங்க வாழ்க்கையில் அஷ்வகந்தாவின் முக்கிய பயன் !
உப்பை ஏன் அடுப்பு பக்கத்தி வைக்க கூடாது?
அது போல் உப்பை ஒளி உட்புகாத பாத்திரத்தில் வைக்க வேண்டும். ஏனென்றால் சூரிய ஒளியின் தாக்கத்தால் அயோடின் அழிந்து விடும்.
அது போல் உப்பு டப்பாவை அடுப்புக்கு அருகில் வைக்க கூடாது என்பதற்கான காரணமும் இதுவாகும். உப்பில் இருக்கும் அயோடின் அழிந்த பின் அவற்றை உணவில் சேர்ப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.