ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான டயட் பிரபலமாக இருக்கும். இப்போதைய டிரெண்ட் என்ன தெரியுமா? வானவில் டயட் (ரெயின்போ டயட்).
வானவில் நிற டயட் என்பதும் ஒன்றும் புரியாத வார்த்தை அல்ல. இதனால் கிடைக்கும் பலன்களை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தெரிந்து கொண்டு, இதை பின்பற்றுகிறார்கள்.
தினமும் பல்வேறு வண்ணங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது தான் வானவில் டயட். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் குறிப்பிட்ட மைக்ரோ, மேக்ரோ ஊட்டச்சத்துகள் தேவை.
அதற்காக விட்டமின் மற்றும் ஊட்டச்சத்துகள் அடங்கிய டயட்டை நாம் பின்பற்ற வேண்டும். கீரைகள், கேரட், ஸ்டராபெரி போன்ற வண்ணமயமான உணவுகளால் நமது உடல் ஆரோக்கியம் வலுவடையவே செய்யும்.
முந்திரி பருப்பு பட்டர் செய்வது எப்படி?
வானவில் டயட் என்பதையே இப்போது தான் கேள்விப் படுகிறீர்களா. இதோ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்…
சரி, இந்த வானவில் டயட்டை எப்படி பின்பற்றுவது?
சிவப்பு:
சிவப்பு நிற உணவுகள் நமது இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு நல்லது. ஆகவே தக்காளி, சிவப்பு மிளகாய் (வற்றல்), ஸ்ட்ராபெரி, தர்பூசணி ஆகியவற்றை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆரஞ்ச்:
ஆரஞ்ச் நிற உணவுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும், நமது உடலில் ஏற்படும் காயம், வீக்கம் போன்றவற்றை குறைக்கவும் இது உதவுகிறது.
ஆகையால் கேரட், ஆரஞ்சு பழம், சர்க்கரைவள்ளி கிழங்கு, வாதுமை பழம் (ஆப்ரிகாட்) ஆகியவற்றை உங்கள் டயட்டில் சேர்ட்த்துக் கொள்ளுங்கள்.
கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?
மஞ்சள்:
மஞ்சள் வண்ண உணவுகள் நமது பார்வையை மேம்படுத்தவும் பல வகையான புற்றுநோய் களிலிருந்து நம்மை காக்கவும் பயன்படுகிறது.
பைனாப்பிள், வாழைப்பழம், மஞ்சள் நிற குடை மிளகாய், எலுமிச்சை போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பச்சை:
பச்சை நிற உணவுகள் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. பச்சை நிற காய்கறிகள், பழங்களை உணவில் சேர்க்கும் போது வயிற்றில் இருக்கும் குழந்தை நலமாக இருப்பதோடு மகப்பேறு சமயத்தில் நரம்புத்தண்டு பாதிக்காமல் தடுக்கிறது.ரத்த அழுத்தத்தை முறைபடுத்தவும் இதய நோய் வராமல் தடுக்கவும் இவை பயன்படுகிறது. ப்ளூபெரி, கருப்பு திராட்சை, ஊதா நிற முட்டைகோஸ் மற்றும் கத்தரிக்காயை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெறும் வயித்துல இதெல்லாம் சாப்பிடால் கஷ்டப்படுவீங்க !
வெள்ளை:
உங்களின் எலும்பு மற்றும் பற்களின் நலத்திற்கு வெள்ளை நிற உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இவை கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. காலி ஃபிளவர், வெங்காயம், பூண்டு மற்றும் காளான் போன்றவற்றை நன்றாக சாப்பிடுங்கள்.