செம்ம டேஸ்டான பிரட் பப்ஸ் செய்வது எப்படி?





செம்ம டேஸ்டான பிரட் பப்ஸ் செய்வது எப்படி?

0

நிறைய பேருக்கு காலை உணவாக பிரட் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். தினமும் கூட காலை உணவுக்கு பிரட் எடுத்துக் கொள்வார்கள். பிரட் ஒரு நல்ல ஆற்றல் மூலமாகும் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகளில் அதிகமாக உள்ளது.

செம்ம டேஸ்டான பிரட் பப்ஸ் செய்வது எப்படி?

இது செரிமானத்தின் போது ஆற்றலை கொடுக்கிறது. பிரட்டில் அதிகப் படியான கலோரிகள் இருக்கின்றன. ஆனால் ஊட்டச் சத்துக்கள் மிக மிகக் குறைவாக உள்ளது. வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவது நல்லது கிடையாது. 

இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.காலை வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடும் போது, குறிப்பாக ஒயிட் பிரட் காலையில் எடுத்துக் கொள்ளும் போது அது அசாதாரணமாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.

வெறும் வயிற்றில் பிரட் சாப்பிடுவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கச் செய்யும் குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இன்னும் கூடுதல் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !

பிரட் வைத்து சூப்ரான பப்ஸ் செய்ய முடியும். இது மிகவும் சுவையான ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இருக்கும்.

தேவையான பொருட்கள் . :

பிரட் - 10

மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

வெண்ணை - ஒரு டீஸ்பூன்

பெரிய வெங்காயம் நறுக்கியது - 1

சோம்பு பவுடர் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

கேரட், பீன்ஸ், பட்டாணி - 

கரம் மசாலா - கால் டீஸ் பூன்

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

உருளைக்கிழங்கு வேக வைத்தது - 2 

பச்சை மிளகாய் - 1

உப்பு - தேவையான அளவு

செய்முறை . : 

செம்ம டேஸ்டான பிரட் பப்ஸ் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்க்கவும். தொடர்ந்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு தூள், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்கவும். 

தொடர்ந்து தனியாக அவித்து வைத்திருந்த கேரட், பீன்ஸ், பட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும். தொடர்ந்து அதில் கரம் மசாலா, மிளகாய் தூள், உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். 

எல்லாம் சேர்த்து நல்ல மசாலாவாக வர வேண்டும். தண்ணீர் சேர்த்து மைதா மாவை பேஸ்ட் போல் மாற்ற வேண்டும். தொடர்ந்து பிரட்டின் ஓரங்களை வெட்ட வேண்டும். 

நீண்ட நேரம் வேலை பார்த்தால் பக்கவாதம் அபாயம் !

ஒரு பக்கம் மட்டும் செய்த மாசாலாவை வைத்து. அந்த பிரட்டின் ஓரங்களில் மைதா பேஸ்டை சேர்த்து ஒட்ட வேண்டும். தற்போது இதற்கு மேல் இனியொரு பிரட் துண்டை வைக்கவும். 

இரண்டு பக்கங்களும் வெண்ணை தடவி, தோசைக் கல்லில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)