ருசியான சேப்பங்கிழங்கு சமோசா செய்வது எப்படி?





ருசியான சேப்பங்கிழங்கு சமோசா செய்வது எப்படி?

0

இந்தியாவில் விதவிதமான உணவுகளுக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை. நாம் விதவிதமாக தேர்வு செய்து சாப்பிடுவதற்கு ஏராளமான உணவுகள் இங்கு கொட்டிக் கிடக்கின்றன. 

ருசியான சேப்பங்கிழங்கு சமோசா செய்வது எப்படி?
வட இந்தியா முழுமைக்கும் கொட்டிக் மிக பிரபலமான உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவிலும் சமோசாக்கள் கிடைக்கின்றன. நம்மில் பலருக்கும் மிகவும் பிடித்த தின்பண்டங்களில் ஒன்று சமோசா. 

இதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எத்தனை முறை வெளியில் சென்றாலும், அத்தனை முறையும் ஒரு டீயும், சமோசாவும் சாப்பிடாமல் வீட்டிற்கு திரும்பிய சரித்திரம் யாருடைய வாழ்க்கையிலும் இருக்காது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு மாலை நேர சிற்றுண்டியாக சமோசா உள்ளது. இது செய்வது பெரிய விஷயம் அல்ல, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை சுலபமாக செய்யலாம். 

இந்த சமோசாவில் விதவிதமான வகைகள் இருக்கின்றன. உருளைக்கிழங்கு சமோசா, பன்னீர் சமோசா, வெங்காய சமோசா, கேரட் மற்றும் கோஸ் சமோசா, பழைய சமோசா முறைகளும் புதிய சமோசா முறைகளுமாக நிறைய வகைகள் இருக்கின்றன. 

மாலை நேர ஸ்நாக்ஸ் வகைகளில் போண்டா, பஜ்ஜி, வடை என பல ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது சேப்பங்கிழங்கு சமோசா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் . : 

மைதா - 1 1/2 கப்

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

சேப்பங்கிழங்கு - 6 

சீரகம் - 1 டீஸ்பூன் 

பச்சை மிளகாய் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு 

மசாலா செய்ய . :

நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை- சிறிதளவு  

இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்

மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன் 

லுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

கொத்தமல்லி தழை - சிறிதளவு 

செய்முறை . : 

ருசியான சேப்பங்கிழங்கு சமோசா செய்வது எப்படி?

முதலில் மைதா மாவில் உப்பு, எண்ணெய் விட்டு பிசையவும். பின் சிறிதளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.  

இதனை 30 நிமிடங்கள் வரை மூடி போட்டு அப்படியே வைத்து விடவும்.  சேப்பங்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.  

பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.  

சிறிது நேரம் கழித்து மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லி தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் கலந்து விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.  

தினமும் கருவாடு சாப்பிடலாமா? நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்குமா?

பின்னர் மசித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு சிறிது நேரம் வேக விட்டு அடுப்பை அணைத்து விடவும்.  பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சமோசா போல் சுருட்டி கொள்ளவும். 

பின் அதில் செய்து வைத்த மசாலாவை வைக்கவும்.  இப்பொது வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)