தீபாவளிக்கு ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி?





தீபாவளிக்கு ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி?

வழக்கமான லட்டுக்கள் போர் அடித்து விட்டதா? இதோ இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்த ஒரு புதிய லட்டு. ஜவ்வரிசியில் செய்து இந்த தீபாவளிக்கு ஒரு வித்யாசமான சுவை சேர்த்திடுங்க.

தீபாவளிக்கு ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி?
ஜவ்வரிசி லட்டு, மிதமான இனிப்பில் மிகவும் சுவையானதாக இருக்கும். ஜவ்வரிசி மற்றும் சர்க்கரை சேர்த்து நெய்யுடன் உருண்டைகளாக பிடித்து எடுக்க வேண்டும். 

இந்த தீபாவளிக்கு முயற்சிக்க வேண்டிய இனிப்பு வகைகளுள் ஒன்று இந்த ஜவ்வரிசி லட்டு. இதை சபுதனா லட்டு, சகோ லட்டு என பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள்.

ஆர்கானிக் க்ரில்டு சிக்கன் பிரெஸ்ட் வித் மஷ்ரூம் சாஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் . :

ஜவ்வரிசி – அரை கப்

சர்க்கரை – கால் கப்

நெய் – கால் கப்

தேங்காய் – அரை கப் (துருவியது)

ஏலக்காய் – 1

முந்திரி – 8 (உடைத்தது)

செய்முறை . :

தீபாவளிக்கு ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி?

ஜவ்வரிசியில் இது போன்ற லட்டு, கிச்சடி போன்றவை செய்வதற்கு கெட்டி ஜவ்வரிசியை வாங்கிக் கொள்ள வேண்டும். 

அதை தூசி நீக்கி எடுத்து ஒரு கடாயில் சேர்த்து பொன்னிறமாகும் வரை, டிரையாக வறுத்து எடுக்க வேண்டும். ஜவ்வரிசி நன்றாக உப்பி வரவேண்டும். ஜவ்வரிசி நன்றாக வறுபட்டு வர குறைந்தது 20 நிமிடங்கள் தேவைப்படும்.

ஈஸி முட்டை குழம்பு செய்வது எப்படி?

அதை ஆற வைத்து ஒரு காய்ந்த மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்துவிட வேண்டும்.

இப்போது அதே மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டும். இதையும் பொடி செய்து வைத்துள்ள ஜவ்வரியில் சேர்த்து இப்போது தேங்காய் சேர்க்க வேண்டும். 

நீங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்த வேண்டு மென்றால், டெசிகேடட் கோக்கனட் சேர்க்க வேண்டும். 

உடனடியாக பயன்படுத்த வேண்டு மென்றால், துருவிய சாதாரண தேங்காயை கடாயில் நெய் சேர்த்து ஈரப்பபதம் போகும் வரை வறுத்து எடுத்து சேர்க்க வேண்டும்.

இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அந்த கலவையில் சேர்க்க வேண்டும்.

அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். உருகிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

கைகளால் நன்றாக கட்டிகளை உடைத்து விட்டு, கலந்துவிட வேண்டும். நன்றாக கலந்து உருண்டைகளாக பிடித்து எடுக்க வேண்டும்.

இதை நீங்கள் ஒரு வாரத்திற்கு வைத்துக் கொள்ளலாம். அதற்கு காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துவிட வேண்டும்.

குஜராத்தி மசாலா உருளைக்கிழங்கு செய்வது எப்படி?

குறிப்புகள் . :

நெய்யை மொத்தமாக சேர்த்து விடக்கூடாது. கொஞ்சம், கொஞ்சமாகத் தான் சேர்க்க வேண்டும். அதிக நெய்யையும் சேர்க்கக் கூடாது தேவையான அளவை சரியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தேவையான் நட்ஸ்கள் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ்களை சேர்த்துக் கொள்ளலாம். ஜவ்வரிசியை கட்டாயம் வறுத்து தான் பயன்படுத்த வேண்டும். 

அதை பொறுமையாக குறைவான தீயில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும். வேண்டுமானால் மிதமான தீ வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் கூடாது.

Tags: