டேஸ்டியான ஆட்டு மூளை மசாலா செய்வது எப்படி?





டேஸ்டியான ஆட்டு மூளை மசாலா செய்வது எப்படி?

0

கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆட்டு மாமிசம் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. 

டேஸ்டியான ஆட்டு மூளை மசாலா செய்வது எப்படி?
ஆட்டுக் கறியில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. ஆட்டின் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு விதமான பலனை தருவதாக உள்ளது. ஆட்டு மூளையில் கெட்டக் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. 

அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நினைவாற்றலை அதிகரிக்கும். இது மனித மூளைக்கு அதிக சக்தியை கொடுக்கும். 

கண்கள் குளிர்ச்சி பெறும். புத்தி தெளிவடையும், நினைவாற்றல் அதிகரிக்கும். விந்தணு குறைபாடு உடைய ஆண்கள் இதை சாப்பிட தாது விருத்தி உண்டாகும்.

மலையாளிப் பெண்கள் அழகாக இருக்க காரணம்?

இனி ஆட்டு மூளை பயன்படுத்தி டேஸ்டியான ஆட்டு மூளை மசாலா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.

தேவையானவை : . 

ஆட்டு மூளை - 1,

முட்டை - 3,

மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்,

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,

தனியா தூள் - 2 டீஸ்பூன்,

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,

சோம்பு தூள் - 1 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

நறுக்கிய வெங்காயம் - 100 கிராம்,

நறுக்கிய தக்காளி - 100 கிராம்,

உப்பு - தேவைக்கு,

கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை : . 

டேஸ்டியான ஆட்டு மூளை மசாலா செய்வது எப்படி?

மூளையை நன்கு சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு பிரட்டி தனியே வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கரம் மசாலாத் தூள் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 

பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மேலே கொடுத்துள்ள மற்ற மசாலா பொருட்களை சேர்க்கவும். வாசனை போகும் வரை வதக்கி மூளையை சேர்த்து இறக்கவும்.

எம்டி பிரியாணி செய்முறை !

முட்டையில் உப்பு, பச்சை மிளகாய், மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பணியாரக் கடாயை சூடாக்கி அதில் எண்ணெய் சேர்த்து முட்டை கலவையை ஊற்றவும். 

அதில் மூளை மசாலாவை வைத்து இரண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுத்து, கொத்த மல்லித் தழையால் அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)