சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் நாவல் பழம் !





சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் நாவல் பழம் !

0

நாவல் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் நாவல் பழம் !
வியாபார நோக்கில், இதை யாரும் பயிரிடாததால், இந்தப் பழங்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அதனால் இதன் விலையும் எக்கச்சக்கமாக இருக்கிறது.

தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.

நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.

நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

இரவில் விமானங்கள் எவ்வாறு பறக்கின்றன?

வயிற்றுப்புண் குணமாக : . 

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் நாவல் பழம் !

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்மை : . 

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

குவாரண்டைன் மலச்சிக்கல் என்பது என்ன? எப்படி விடுபடுவது?

ஞாபக சக்தி : . 

ஞாபக சக்தியை அதிகரிக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும்.

செரியாமை நீங்க : . 

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் நாவல் பழம் !

நாவல் மரத்தின் இலையை கொழுந்து எடுத்து சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி அதில் இரண்டு ஏலக்காய் இடித்து அதில் போட்டு இலவங்கம் தூள் சேர்த்து தினமும் 2 வேளை கொடுக்க செரியாமை, வயிற்றுப் பொருமல், பேதி, உடல் சூடு குணமாகும்.

மாரடைப்பை தடுக்கும் : . 

நாவல் பழத்தை சாப்பிட்டு வர, தாமினிகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறைந்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

மூளை சுறுசுறுப்பாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !

சர்க்கரை நோய் கட்டுப்பட : . 

நாவல் பழத்தின் விதைகளை காய வைத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து தினமும் காலை வேளையில் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இந்நோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)