பிரியாணியை பிடிக்காதவர் இருப்பார்களா... ட்ரீட் என்றதும் எங்க பிரியாணி டேஸ்டியாக கிடைக்கும் என்றே தேடுவோம். எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு, பிரியாணி.
பிரியாணியில் நெய், எண்ணெய் எனக் கொழுப்பை அதிகரிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தக் கொழுப்பைக் குறைக்க, வெங்காயத்தை நறுக்கி சைடுடிஷ்ஷாகச் சாப்பிடலாம்.
இது உணவில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வெங்காயத்தில், தயிர் சேர்ப்பதில்தான் பிரச்னை தொடங்குகிறது.
பொதுவாக தயிருடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி கலவையைத் தான் தயிர் பச்சடி என்று சொல்வார்கள். இந்த பச்சடியை சாதம், பிரியாணி, ரொட்டி என்று பல உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவார்கள்.
0.பொதுவாக அசைவத்துடன் தயிர் சேர்க்கக் கூடாது எனும் கருத்து உள்ளது. ரைத்தா செய்வதற்கு பாலாடை நீக்கிய பாலில் தயாரித்த தயிரைச் சேர்க்கலாம். மேலும், கடையில் விற்கப்படும் யோகர்ட்டை பயன்படுத்தியும் ரைத்தா செய்யலாம்.
1.தயிர் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. வெங்காயம் உடலுக்கு சூடு கொடுக்கும்.
2. தயிர் பச்சடியில் வெங்காயத்தை சேர்ப்பது ஆபத்து என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவை இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டால் உடலுக்கு வாதம், பித்தம் மற்றும் கபம் உருவாகி விடும்.
3.தயிர் பச்சடியில் உள்ள வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும்.
4. தயிருடன், வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணம், அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் பிற வயிற்றுப் பிரச்சினைகளை உருவாக்கி விடும்.
6. மேலும், உடலில் தோல் ஒவ்வாமை, அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி விடும்.
7. தயிர் மற்றும் பச்சை வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவதால் குமட்டல், வாந்தி, உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்.
8. இந்த தயிர் பச்சடி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
9.தயிர் பச்சடி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
10.மேலும் இந்த தயிர் பச்சடியில் செரிமானத்தை துரிதப் படுத்தும் ஆற்றல் உள்ளது.
11.தயிர் பச்சடியில் எடையைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது.
12.தயிர் பச்சடியில் இரத்த சர்க்கரையை குறைக்கும் ஆற்றல் உள்ளது.
13.இந்த தயிர் பச்சடி இரத்த அழுத்தத்தையும் கட்டுப் படுத்துகிறது.