கமகமக்கும் சுட்டு வச்ச சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி? #Koottu





கமகமக்கும் சுட்டு வச்ச சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி? #Koottu

0

ஒரே ஒரு முறை இந்த ஸ்டெயிலில் சுரைக்காயை சுட்டு செஞ்சு பாருங்க. ருசி அருமையாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

கமகமக்கும் சுட்டு வச்ச சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி?
பொதுவாக வீடுகளில் சுரைக்காய் வாங்கினால் சாம்பார் தான். மீறி போனால் குருமா.. ஆனால் ஒரே ஒரு முறை இந்த ஸ்டெயிலில் சுரைக்காயை சுட்டு செஞ்சு பாருங்க. ருசி அருமையாக இருக்கும். 

உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் . :

சுரைக்காய்

வெங்காயம்

தக்காளி

பச்சை மிளகாய்

உப்பு

எண்ணெய்

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

சீரக தூள்

மல்லித்தூள்

தண்ணீர்

தயிர்

கடலை பருப்பு

இஞ்சி

பூண்டு

மல்லி இலை

கறிவேப்பிலை

செய்முறை . :

கமகமக்கும் சுட்டு வச்ச சுரைக்காய் கூட்டு செய்வது எப்படி?

தேவையான அளவில் சுரைக்காயை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். சுரைக்காயின் தோலில் கொஞ்சமாக எண்ணெய் தடவி கொள்ள வேண்டும். 

பின்னர் அதை அடுப்பில் சுட வேண்டும். சுரைக்காயின் அனைத்து பகுதியும் நன்றாக திருப்பி திருப்பி சுட்டால் தோல் பகுதி நன்றாக கருப்பாகி விடும். 

ஒரு 15 நிமிடம் சுட்ட பிறகு சுரைக்காயை அப்படியே ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி விடவேண்டும். ஒரு 10 நிமிடம் அப்படியே நேரம் மூடி வைத்து விட்டால் ஏற்கனவே வெந்த சுரைக்காய் இன்னும் பக்குவமாகி விடும். 

பின்னர் மேலே உள்ள கருப்பு தோலை நன்றாக கத்தி வைத்து வெட்டி விட வேண்டும். அதை லேசாக தண்ணீர் விட்டு கழுவி நறுக்கி மிக்ஸியில் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பை சேர்த்து கொள்ள வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் கொத்தமல்லி வேரோடு கழுவி சேர்த்து கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் கொஞ்சம் இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வேக விட வேண்டும். 

தக்காளி மசிந்து வரும் போது அதில் 1 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள், 1 ஸ்பூன் சீரக தூள், தேவையான அளவு உப்பு கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

மசாலா பச்சை வாடை போன பிறகு அதில் மிக்ஸியில் நொறுக்கி எடுத்த சுட்ட சுரைக்காயை சேர்த்து கலந்து விட வேண்டும். ஒரு பத்து நிமிடம் நன்றாக கலந்து விட்ட பின் வேக விட வேண்டும். 

கடைசியாக அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கொள்ள வேண்டும். தயிர் சேர்க்க பிடிக்காதவர்கள் தக்காளியை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். 

கடைசியாக அதில் கொஞ்சமாக கொத்த மல்லி இலையை சேர்த்து இறக்கி விடலாம். மிகவும் ருசியாக இருக்கும். 

இது சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். இல்லை என்றால் சூடான சாதத்தில் இந்த கூட்டை பிசைந்து சாப்பிடலாம். ருசி அருமையாக இருக்கும்.

Post a Comment

0Comments

Post a Comment (0)