தீபாவளிக்கு வீட்டை அலங்கரிப்பது எப்படி? இந்த ஐடியாவ ட்ரை பண்ணுங்க !





தீபாவளிக்கு வீட்டை அலங்கரிப்பது எப்படி? இந்த ஐடியாவ ட்ரை பண்ணுங்க !

0

தீபாவளிப் பண்டிகை நாட்கள் நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் அதற்கான தயாரெடுப்பு பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டு வருவோம். வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். 

தீபாவளிக்கு வீட்டை அலங்கரிப்பது எப்படி? இந்த ஐடியாவ ட்ரை பண்ணுங்க !
பலகாரங்கள் தயார் செய்ய வேண்டும், புத்தாடைகள் வாங்க வேண்டும் உள்ளிட்ட ஏராளமான வேலைகள் இருக்கும். இந்த வேலைகளுக்கு இடையே கடைசி நேரத்தில் உங்கள் வீட்டை மேலும் அழகாக்கி தீபாவளியை கொண்டாட தயாராவது கொஞ்சம் கடினம் தான். 

அதற்காக பண்டிகை நாளை ஏனோ, தானோ என கடமைக்காக கொண்டாடினால் முழுமையான மகிழ்ச்சியை பெற முடியாது. 

இந்நிலையில், உங்கள் வீடு மற்றும் சுற்றுபுறத்தை முன்கூட்டியே திட்டமிட்டு சுத்தம் செய்து அழகாக்குங்கள். அதற்கான சில வழிகாட்டுதல்களை இங்கே பார்க்கலாம்.

பெண் உடல் அதிசயங்களும்.. ரகசியங்களும்.. என்டோமெட்ரியம் - Endometrium !

தமிழர்களிடையே கோலமிடும் வழக்கம் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் இருந்து வரும் நிலையில் அரிசி மாவு கோலம், ரங்கோலி கோலம் மற்றும் விளக்கு கோலம் உள்ளிட்ட பல கோலங்கள் உள்ளன. 

தீபாவளிக்கு வீட்டை அலங்கரிப்பது எப்படி? இந்த ஐடியாவ ட்ரை பண்ணுங்க !

தீபாவளி பண்டிகை என்று ரங்கோலி கோலமிட்டு இரவு தீபங்களை அதன் இடையே ஏற்றி வையுங்கள். உங்கள் வீட்டிற்குள் இடமிருந்தால் பூக்கோலம் போட்டு அங்கேயும் தீபங்களை ஏற்றி தெய்வங்களை வழிபடலாம்.

பூக்கள் மற்றும் மா இலைகளால் தோரணம் செய்து வீட்டின் முன்பக்கம் உள்ளிட்ட இடங்களில் தொங்க விட்டால் அழகாக இருக்கும். வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்கள் உங்களது அலங்காரத்தை கொஞ்சம் எடுத்துக் காட்டும்.

தாமரைப்பூ லட்சுமி தேவியின் கையில் இருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். தீபாவளி என்று லட்சுமிதேவி வீட்டுக்குள் வந்து வறுமையை போக்கி செழிப்படைய செய்வார் என்பது புராண வரலாறு. 

மூட்டு வலியால் கஷ்டப்படுபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் !

வட மாநிலங்களில் லட்சுமி தேவியை வரவேற்று வாசலில் இருந்து பூஜை அறை வரை காலடி கோலமிட்டு வணங்குவார்கள். தமிழகத்தில் தாமரை பூவே லட்சுமி தேவிக்கு வைத்து பூஜை வழிபாடு செய்வார்கள்.

என்னதான் விளக்கு ஏற்றி வைத்தாலும், வீடு முழுக்க ஒளிமயம் பரவ வேண்டும் என்றால் சீரியல் லைட்டுகள் இன்றியமையாத ஒன்று. ஹேஙிங் சீரியல் லைட்டுகளை வீட்டின் வெளிப்புறத்தில் தொங்க விட்டவாறு அலங்காரம் செய்யுங்கள். 

தீபாவளிக்கு வீட்டை அலங்கரிப்பது எப்படி? இந்த ஐடியாவ ட்ரை பண்ணுங்க !

அதிலும் குறிப்பாக தீபவிளக்குகளுக்கு ஏற்றவாறு கோல்டன் கலர் சீரியல் லைட்டுகளை தேர்வு செய்யுங்கள் இது உங்கள் வீட்டை மேலும் அழகானதாக மாற்றும்.

இப்போது அப்படியே கண்களை மூடி இப்படி யெல்லாம் அலங்காரம் செய்யப்பட்ட உங்கள் வீட்டையும், புத்தாடையுடன் பட்டாசு வெடிக்க தயாராகி நிர்க்கும் உங்களையும், உங்கள் உறவினர்களையும் நினைத்து பாருங்கள். 

அவ்வளவு அழகும், மகிழ்ச்சியும் கொட்டி கிடக்கிறது அல்லவா... இதே மகிழ்ச்சியோடு இன்று முதலே வீட்டை அலங்கரிக்கும் முன்னெடுப்புக்கு தயாராகுங்கள்.

சிட்ரஸ் அழற்சி இருக்கா, இல்லையானு தெரியுமா? அதை தெரிஞ்சு கொள்ள… !

எனவே இதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு இந்த வருடம் தீபாவளியை உற்றார் உறவினர்களுடன் மகிழ்ச்சியாகவும் வண்ணமயமாகவும் கொண்டாடி மகிழுங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)