எடையை குறைக்க பாசி பயறு உளுந்து தோசை செய்வது எப்படி?





எடையை குறைக்க பாசி பயறு உளுந்து தோசை செய்வது எப்படி?

0

எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று அதிகப் படியான கலோரி உட்கொள்ளல் ஆகும். அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ள உணவு உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். 

எடையை குறைக்க பாசி பயறு உளுந்து தோசை செய்வது எப்படி?

இது இதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் குறித்த ஆபத்தை ஏற்படுத்துகிறது. காலை உணவு அன்றைய மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது, 

மேலும் ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது எடை இழப்புக்கும் முக்கியமானது. காலை உணவு முக்கியமானதாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று. அது உங்கள் வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்ய உதவுகிறது.

நீங்கள் தூங்கும் போது, ​​உங்கள் வளர்சிதை மாற்றம் குறைகிறது, எனவே, நீங்கள் எழுந்திருக்கும் போது, ​​உடல் அதன் அத்தியாவசிய செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு தேவையான ஆற்றல் பெற உடலுக்கான எரிபொருள் நிரப்ப வேண்டும். 

காலை உணவை உட்கொள்வதால், நாள் முழுவதும் உங்களைத் தொடர தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. மேலும், காலை உணவைத் தவிர்ப்பது உங்களுக்கு பசியை உண்டாக்கும்.

ஒரு சத்தான காலை உணவு உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குகிறது. இதன்படி, உடல் எடையை குறைக்கும் தோசை எப்படி செய்வது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் . :

பாசி பயறு - 1 கப்

உளுந்து - 1/4 கப்

அரிசி - 4 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 4

வெந்தயம் - 1 டீ ஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை 

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை . :

எடையை குறைக்க பாசி பயறு உளுந்து தோசை செய்வது எப்படி?

முதலில் பாசி பயறு, உளுந்து மற்றும் வெந்தயம் ஆகியவற்றை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளவும். பின்னர் அதனை சரியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். 

4 மணி நேரத்திற்கு பின்னர் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி போடவும். 

பின் தேவையான அளவு உப்பு, பெருங்காய தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை தொடர்ந்து தோசைக்கல் வைத்து தோசை மாதிரி மாவை சுட்டு எடுத்தால் சுவையான பச்சை பயறு தோசை தயார்!

குறிப்பு . :

இதனை இரவு நேர சாப்பாட்டில் சேர்த்து கொள்வது சிறந்தது.       

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)