நாடு முழுவதும் வாழும் இன்று தீபாவளியை முன்னிட்டு இந்துக்கள் பட்டாசுகளை வெடித்து கோலாகளமாக பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
இன்று அதிகாலை முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதே போல புதுமணத் தம்பதிகள் தலை தீபாவளியை கொண்டாடி வருகிறார்கள்.
குங்குமப்பூ பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் !
வீட்டில் சமைத்த உணவு பலகாரங்கள் மற்றும் இனிப்புகளை மாற்று மதத்தினருக்கு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி வருகிறார்கள்.
தீபாவளி தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் நடைபெறும் சந்தைகளில் ஆடு மற்றும் கோழிகள் எல்லாம் கோடி கணக்கில் விற்பனையானது என்று செய்திகளில் வருவதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.
விஜயநகர பேரரசு தமிழ்நாட்டில் வருவதற்கு முன்பு தீபாவளி என்றொரு பண்டிகையை தமிழர்கள் கொண்டாடவில்லை என கூறியிருக்கும் அவர், சங்க இலக்கியங்களில் தீபாவளி பற்றிய குறிப்புகள் எதனையும் பார்க்க முடியாது.
தீபாவளி வட இந்தியாவில் இருந்து இறக்குமதியான பண்டிகை, இது புராணக் கதைகள் மூலம் கட்டமைக்கப்பட்ட பிராமணிய பண்டிகை என்று அவர் கூறியுள்ளார்.
தமிழர்கள் சங்க இலக்கிய காலம் தொட்டே கொண்டாட்ட காலத்தில் அசைவ உணவுகளை உண்பதை வழக்கமாக கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
தீபாவளி தமிழர்களைப் பொறுத்தவரை கொண்டாட்டத்தில் இருக்கும் போதும், விருந்தினரை உபசரிக்கும் போதும் புலால் உணவுகளை வைத்து அவர்களுக்கு விருந்து அளிப்பதையே பெருமையாக கருதி யிருக்கின்றனர்.
ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம் !
தீபாவளி பண்டிகை என்பதே விநாயகர் சதூர்த்தி போல் தமிழ்நாட்டில் இறக்குமதியான பண்டிகையே தவிர, இது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை எல்லாம் கிடையாது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மற்றவர்களுக்கு விருந்து கொடுக்கும் போது அதனை சிறப்பாக கொடுப்பதற்கு இறைச்சி கலந்த உணவு அளிப்பதை கவுரமாக கருதும் வழக்கம் நெடுங்காலமாக தமிழ்நாட்டில் உள்ளது.