பெண்கள் என்றாலேயே அழகான முகத்தோற்றம், வசீகரிக்கும் கண்கள் என அவர்களின் அழகை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒரு பெண்ணுக்கு அழகு சேர்ப்பதில் கண்மை இன்றியமையாதது. எவ்வளவு மேக்கப் போட்டும், கண்களில் மை போடவில்லை என்றால், அந்த மேக்கப் முழுமை அடையாது.
அதே போல மேக்கப் விரும்பாத பெண்கள் கூட, காஜல் மட்டும் அணிவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவதும் உண்மை தான்.
கண்களுக்கு காஜல் அணிவது, கண்களை எடுப்பாக காட்டுவதுடன், உங்கள் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலும் சந்தையில் கிடைக்கும் ஐலைனர் ரசாயனம் கொண்டு தயாரிக்கப் படுகிறது.
மாறி மாறி வரும் டிரெண்டிங்கிற்கு ஏற்ப தற்போது பெண்கள் தங்கள் கண்களின் அழகை அதிகரிக்க காஜல், ஐலைனர், மஸ்காரா போன்ற கண்களுக்காக உள்ள பிரத்யேக அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர்.
பெண்களை கவரும் விதமாக பல வண்ணங்களில் கிடைத்தாலும் எல்லாவற்றிலும் நிச்சயம் கெமிக்கல் கலந்திருக்கும்.
இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கியமாக இயற்கையான முறையில் கெமிக்கல் இல்லாத ஐலைனரை வீட்டிலேயே செய்யலாம்.
நம் சமையல் அறையில் கிடைக்கக் கூடிய பொருள்களை வைத்து எப்படி? ஐலைனர் தயாரிக்கலாம் என இங்கே தெரிந்து கொள்வோம்.
பீட்ரூட் ஐலைனர்
அரை பீட்ரூட்டை அரைத்து, அதன் சாற்றை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறு, இரண்டு தேக்கரண்டி நேச்சுரல் அலோவேரா ஜெல் சேர்க்கவும்.
ஸிலோன் எக் பரோட்டா செய்வது
இரண்டையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட் செய்யவும். பிறகு ஒரு காஸ்மெட்டிக் பிரஷ் மூலம் பேஸ்டில் சிறிது நனைத்த பிறகு, உங்கள் கண் ஓரங்களில் அழகான இளஞ்சிவப்பு இறக்கை போல வரையுங்கள்.
வீட்டில் நீங்களே செய்யக்கூடிய இந்த ஐலைனர் உங்கள் தோற்றத்தை மிகவும் கவர்ச்சியாக மாற்றும். எனவே கண்டிப்பா டிரை பண்ணுங்க!!