சுடு தண்ணீரில் வெள்ளை நிறத்தில் தூசி காணப்படுவது ஏன்?





சுடு தண்ணீரில் வெள்ளை நிறத்தில் தூசி காணப்படுவது ஏன்?

1

கிணறுகள், ஆறுகள் உட்படப் பெரும்பாலான மூலங்களிலிருந்து பெறப்படும் தண்ணீரில் கல்சியம் பை கார்பனேட் (Ca(HCO₃)₂) உண்டு. இதுவே நீரை வன்மையாக்குவது. 

சுடு தண்ணீரில் வெள்ளை நிறத்தில் தூசி காணப்படுவது ஏன்?
இயறகையில் SOFT WATER என்று ஒன்று கிடையாது. ஆனால் கல்சியம் பைகார்பனேட் மிகச் செறிந்த மிக வன்மையான HARD WATER நிச்சயமாக உண்டு.

தண்ணீரைக் கொதிக்க வைக்கும் போது Ca(HCO₃)₂ ஆனது கார்பன் டை ஆக்சைடை இழந்து கல்சியம் கார்பனேட் ஆக மாறுகிறது. 

கல்சியம் கார்பனேட்டுக்கு நீரில் கரையும் தன்மை மிகக் குறைவு என்பதனால் அது இரண்டு விதங்களில் படிகிறது. முதலாவது நீர் கொதிக்கும் பாத்திரத்தின் அடியில் மிக அதிகமாகப் படியும் படை. 

வக்கிரத்தின் உச்சம் - இந்த இளைஞர் செஞ்ச அருவருப்பான வேலை !

இரண்டாவது கொதித்த நீரின் மேற்பரப்பில் அது ஆறிய பின்பும் காணப்படும் வெண் துகள்கள். இவை இரண்டுமே கல்சியம் கார்பனேட் தான். துகள் மிகவும் அதிகமாக இருந்தால் நீரை வடிகட்டிக் குடிக்கலாம். 

சுடு தண்ணீரில் வெள்ளை நிறத்தில் தூசி காணப்படுவது ஏன்?

ஆனால் அப்படிச் செய்பவர்கள் குறைவு. பாத்திரத்தின் அடியில் படியும் கல்சியம் கார்பனேட் சூடாக்கத் தேவையான வெப்ப நிலையைக் கூட்டும் என்பதனால் காஸ் மற்றும் மின்செலவு அதிகம். 

அன்றியும் உணவின் சுவையைக் குறைக்கும். குளிக்கும் போதும் துணி துவைக்கும் போதும் வன்நீர் பயன்படுத்தும் சோப்பின் நுரைக்கும் தன்மையை எடுத்து விடுவதனால் ஒரு திருப்தியற்ற அனுபவத்தைத் தருகிறது.

கர்ப்பிணிகள் எப்போது பயணம் செய்ய கூடாது? பாதுகாப்பு டிப்ஸ் !

HARD WATER உடலுக்குக் கெடுதியானதல்ல.

Tags:

Post a Comment

1Comments

  1. மலர்விழி30 January, 2024 11:41

    இப்போ தான் புரியுது காரணம்... அருமை

    ReplyDelete
Post a Comment