அகத்திக் கீரையை நம் முன்னோர்கள் மாட்டிற்கு விஷ முறிவுக்காகவே கொடுத்து வந்தார்கள். மாடுகள் மேயும் போது புல்களில் இருக்கும் சிறு சிறு பூச்சிகளையும், சில விஷத்தன்மை வாய்ந்த செடிகளையும் சேர்த்து உண்டு விடும்.
மாடுகள் இப்படி விஷத்தன்மை வாய்ந்த சிறு பூச்சிகளையும் செடிகளையும் உண்டாலும் அதன் பாலில் விஷம் கலப்பதில்லை.
குழந்தைகள் ஏன் சாப்பிடுவதில்லை? இது ஒரு நோயா?
இது போன்ற விஷத்தை முறிக்கும் சக்தி அகத்திக் கீரைக்கு மட்டுமே உண்டு. அதனால் தான் நம் முன்னோர்கள் மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
பின் காலப்போக்கில் இறை வழிபாடுடன் இணைந்து விட்டது. இவ்வாறு மாடுகளுக்கு அகத்திக்கீரை கொடுக்கும் பழக்கம் உருவானது. அகத்திக் கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக அகத்தி கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக் கொண்டது. இன்னொன்று, சிவப்பு நிற பூக்களைக் கொண்ட செவ்வகத்தி.
இவை இரண்டின் இலை, பூ, பட்டை, வேர் ஆகியவை மருந்தாகப் பயன்படுகின்றன. அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால், உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும்.
உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். சிறுநீர், மலம் தாராளமாக வெளியேறும். மனக்கோளாறுகள் நீங்கும். அல்சர் என்னும் வயிற்றுப்புண் குணமாகும்.
சூப்பரான ஆம்லெட் புளிக்குழம்பு செய்வது எப்படி?