இந்த வாழைப்பழத்தில் சத்து உள்ளதா? ஆண்மையை பறிக்கும் உண்மை !





இந்த வாழைப்பழத்தில் சத்து உள்ளதா? ஆண்மையை பறிக்கும் உண்மை !

0

கடைகளில் எளிதில் கிடைக்கும் மற்றும் நம்மில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிட கூடிய ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக இருக்கின்றன வாழைப்பழங்கள். 

இந்த வாழைப்பழத்தில் சத்து உள்ளதா? ஆண்மையை பறிக்கும் உண்மை !
மலிவு விலையில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களாகவும் இவை இருக்கின்றன.நம் நாட்டில் மாம்பழத்திற்கு அடுத்தபடியாக அதிகம் பயிரிடப்படும் பயிராக வாழை இருக்கிறது. 

தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. வாழைப்பழங்களில் காணப்படும் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. 

உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்கள், உடல் பலவீனத்துடன் போராடுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள், திடீரென்று ஏற்படும் பசியை தணிக்க விரும்புபவர்கள், 

பயணங்களின் போது மிகவும் எளிமையான மற்றும் சத்தான பழத்தை எடுத்து கொள்ள விருப்புபவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றவையாக இருக்கின்றன வாழைப்பழங்கள். 

எனினும் பிற பொருள்களில் இருக்கும் கலப்படத்தைப் போல வாழைப்பழத்திலும் கலப்படங்கள் வர தொடங்கி விட்டது.

ஆரம்ப காலங்களில் நகர்ப்புறங்களில் மட்டும் சந்தைக்கு வந்த இந்த கலப்பட ரக வாழைப்பழங்கள் தற்போது கிராமப் புறங்களிலும் விற்பனைக்கு வர தொடங்கி விட்டது. 

பச்சை மற்றும் மஞ்சள் கலந்து பளபளப்பாக இருக்கும் மோரிஸ் பழங்கள் தான் வாழைப்பழங்களில் கலப்பட வகை பழங்களாகும். 

பெங்களூர் வாழைப்பழம் என அறியப்பட்ட இது திசு வளர்ப்பு முறையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட வாழைப் பழங்களாகும். 

தற்போது நமது பாரம்பரிய வாழைப் பழங்களின் சந்தையை முறியடித்து இந்த வகை வாழைப்பழங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.

மான்சாண்டோ என்ற பன்னாட்டு நிறுவனம் தான் இந்த வகை பழங்களை காப்பிரைட்ஸ் முறையில் உலகெங்கிலும் விற்பனை செய்து வருகிறது. 

(getCard) #type=(post) #title=(You might Like)

இவற்றிடமிருந்து இந்த வகை பழங்களை இறக்குமதி செய்து நம் நாட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை சாப்பிடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். 

இந்த வகை வாழைப் பழங்களில் கரப்பான் பூச்சி மற்றும் காட்டுப் பூச்சியின் ஜீன்கள் பயன்படுத்தப் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே இந்த பழங்கள் நீண்ட நாட்கள் கேட்டு போகாமல் இருக்கிறது.

இந்த வாழைப்பழத்தில் சத்து உள்ளதா? ஆண்மையை பறிக்கும் உண்மை !

இந்த மோரிஸ் பழங்களை சாப்பிட்டு வருவதால் ஆஸ்துமா, அலர்ஜி, தோல் பிரச்சனைகள் சுவாசக் கோளாறுகள் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

மேலும் இந்தப் பழங்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படுவதாகவும் உடல் நலம் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்கும் படியும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

இது போன்ற நச்சுத்தன்மை உடைய பழங்களை நம் அரசின் வாழைப்பழ ஆராய்ச்சி நிறுவனமே திருச்சியில் உற்பத்தி செய்கிறது என்பது தான் கொடுமை.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)