கருப்பு கவுனி அரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?





கருப்பு கவுனி அரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?

0

அரிசி வகைகளிலேயே கருப்பு கவுனி மிகச்சிறந்ததாக இருக்கிறது. நார்ச்சத்துக்களின் மூலாதாரமாக விளங்குகிறது கருப்பு கவுனி அரிசி, தாவர அடிப்படையிலான புரதத்தினையும் உள்ளடக்கியுள்ளது. 

கருப்பு கவுனி அரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
மேலும் கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை அளவு உயராமல், சீராக இருக்க உதவுகிறது. 

மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. 

கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, LDL என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் இருதய பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. 

எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும். 

பலாத்கார குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் !

சரி இனி கவுனி அரிசி பயன்படுத்தி டேஸ்டியான கருப்பு கவுனி அரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.

தேவையான பொருள்கள் : .

கருப்பு கவுனி - 1 கப் 

பாசிப்பருப்பு - கால் கப்

வெல்லம் - ஒன்றரை கப்

பால் - 2 கப்

உலர் திராட்சை - 30

முந்திரி பருப்பு - 20 -25

தேங்காய் - கால் மூடி

ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்

நெய் - 100 மில்லி

பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை

செய்முறை : .

கருப்பு கவுனி அரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?

கருப்பு கவுனி அரிசி மற்ற அரிசியைப் போல வேகமாக வேகாது. அதனால் 2-3 மணி நேரத்திற்கு முன்பாகவே அலசி விட்டு ஊற வைத்து விடுங்கள்.

பொங்கல் செய்யத் தொடங்கும் முன் பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து அதை கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பெரிய பாத்திரத்தில் இரண்டு கப் பாலுடன் 5 கப் தண்ணீரும் சேர்த்து (மொத்தம் 7 கப் அளவு) கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் கொதித்த பின் அதில் ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து வேக விடுங்கள். அரிசி வேக அதிக நேரம் எடுக்கும். (குக்கராக இருந்தால் குறைந்தது 10 விசில் வைக்க வேண்டும்).

அரிசி 60 சதவீதம் வெந்த பிறகு பருப்பை சேர்த்தால் போதும். இல்லாவிடில் பருப்பு முழுமையாகக் குழைந்து விடும். அரிசி, பருப்பு இரண்டும் நன்கு வெந்த பிறகு, அதில் வெல்லப்பாகு அல்லது துருவிய வெல்லத்தைச் சேர்த்து கிளறுங்கள்.

ப்ளெயின் நெய் சாதம் செய்வது !

நன்கு வெல்லமும் அரிசியும் சேர்ந்து குழைந்து வேக வேண்டும். தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

அதே போல முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அரிசி, பருப்பு நன்கு வெந்து வந்தபின் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நெய்யையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறுங்கள்.

பிறகு அதில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, உலர் திராட்சையைச் சேர்த்து கிளறி விடுங்கள். பின்பு அடுப்பை அணைத்து விட்டு, மீதமுள்ள எல்லா நெய்யையும் சேர்த்து விடுங்கள். 

கடைசியாக ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தையும் சேர்த்து கலந்து விடுங்கள். இப்போது கொஞ்சம பொங்கல் தளர்வாகத் தான் இருக்கும். ஆற ஆற இறுகிப் போய்விடும். சூடாகப் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

வழக்கமான பொங்கலை விட கருப்பு கவுனி அரிசி பொங்கல் மிக சுவையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)