பகல் க்ரீம்.. நைட் கிரீம்.. இளமையாக இருக்க எதை யூஸ் பண்ணனும் !





பகல் க்ரீம்.. நைட் கிரீம்.. இளமையாக இருக்க எதை யூஸ் பண்ணனும் !

0

தோல் பராமரிப்புக்கு வரும் போது தரமான தயாரிப்புகளாக இருந்தாலும் சரியான முறையில் பயன்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும். இல்லை யெனில் அவை பயனில்லாமல் போய் விடும். 

பகல் க்ரீம்.. நைட் கிரீம்.. இளமையாக இருக்க எதை யூஸ் பண்ணனும் !
அப்படியான ஒன்று முகத்துக்கு பயன்படுத்தும் க்ரீம். முகப்பராமரிப்பில் க்ரீம், லோஷன், சீரம், மாஸ்க் என்று பட்டியலை சொல்லி கொண்டே போகலாம். இவற்றிலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நேரத்துக்கு பயன்படுத்த வேண்டும். 

க்ரீம் வகைகள் என்று எடுத்து கொண்டால் பகல் நேர க்ரீம், இரவு நேர க்ரீம் என்று மார்க்கெட்டில் கிடைக்கும். இவை இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா இதை பயன்படுத்தும் முறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

பெரும்பாலான மாய்சுரைசர்கள் பகல் மற்றும் இரவு நேர க்ரீம்களாக செயல்படும். எனினும் இவை இரண்டுக்குமான வித்தியாசத்தை அறிந்து கொள்வது அவசியம். பகல் க்ரீம் என்பது பொதுவாக இலகுவாக இருக்கும். 

இதை மேக் அப் பயன்பாட்டில் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும். பகல் க்ரீம் என்பது எஸ்பிஎஃப் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்துடன் உருவாக்கப் படுகிறது. 

42 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமையால் படுக்கையில் கிடந்த பெண்ணின் கதை !

இது சருமத்தை புற ஊதாகதிர்கள், அழுக்குகள், தூசி ஆகிய வற்றிலிருந்து பாதுகாக்கிறது. ஈரப்பதமாக வைத்திருக்க செய்கிறது. இரவு நேர க்ரீம்கள் என்பது சற்று அடர்த்தியாக இருக்கும். 

இது வைட்டமின் சி, ஹைலுரோனிக் அமிலம் மற்றும் சரும செயல்பாட்டுக்கு வேண்டிய பொருள்களை கொண்டுள்ளது. இரவில் தோல் பழுது நீக்கும் வேலையை செய்கிறது. 

வயதான தோல் எதிர்ப்பு பண்புகள் கொண்டவையாக இவை இருக்கும். இதை பகலில் பயன்படுத்த கூடாது. இது புற ஊதா ஒளிக்கு சருமத்தை அதிக உணர்திறனாக ஆக்கும்.

பகலில் மற்றும் இரவில் பயன்படுத்தும் க்ரீம் வகைகளின் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்.

பகல் க்ரீம்.. நைட் கிரீம்.. இளமையாக இருக்க எதை யூஸ் பண்ணனும் !

தினமும் வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரத்தில் சருமம் யுவி கதிர்கள், மாசுபாடு, அழுக்கு மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் போன்ற பாதிப்பை எதிர் கொள்கிறது. 

இந்த காரணிகள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் வெகுவாக பாதிக்கலாம். இதை தடுக்கும் வகையில் பகல் நேர க்ரீம் சிறப்பாக செயல்படுகிறது. சூரியனிடமிருந்து சருமத்தை பாதுகாக்க பகல் க்ரீம் பயன்பாட்டில் நாளை தொடங்குங்கள்.

பகல் பொழுது பயன்படுத்த வேண்டிய க்ரீம்கள் இலகுவானவை நீரேற்றம் அளிக்க கூடியவை. பகலில் சருமத்தை கனமாகவோ அல்லது க்ரீஸாகவோ வைக்காமல் ஹைட்ரேட் செய்யும் வகையில் இவை இருக்கும். 

மென்மையான அமைப்பு கொண்டுள்ள இதை பயன்படுத்தும் போது மேக் அப் செய்வது நாள் முழுவதும் கலையாமல் அப்படியே வைத்திருக்க செய்யும்.

ஆண்மையை அதிகரிக்க உதவும் ஆட்டு மூளை ! 

சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் தொடங்குகிறது. பகல் க்ரீம்கள் பயன்பாடு சருமத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் எஸ்பிஎஃப் கொண்டுள்ளன. 

புற ஊதா கதிர்கள் முன்கூட்டிய முதுமை, கரும்புள்ளிகள் மற்றும் தோல் புற்றுநோயை உண்டு செய்யலாம். இதை தவிர்க்க எஸ்பிஎஃப் உடன் கூடிய க்ரீம்கள் பயன்படுத்துவது சரும பாதிப்பை தடுக்க செய்யும்.

சருமத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள கொலாஜன் அவசியமான ஒன்று. நைட் க்ரீம்கள் பயன்பாட்டில் கொலாஜன் உற்பத்தியை தூண்டுவது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

வயதாகும் போது கொலாஜன் அளவு குறைய தொடங்கும். குறைந்த கொலாஜன் உற்பத்தி தோல் சுருக்கங்கள் மற்றும் தொய்வு உண்டு செய்து சீக்கிரம் வயதான தோற்றத்தை அளிக்கிறது. 

இதை தடுக்க நைட் க்ரீம்கள் ரெட்டினோல் மற்றும் பெப்டைட்ஸ் போன்ற பொருள்களை கொண்டு இதன் எதிர்ப்பு விளைவை தூண்டுகின்றன. இதனால் சருமம் இளமையாக இருக்க செய்யும்.

தூங்கும் போது தோல் பழுது நீக்கத்துக்கு தயாராகும். இந்நிலையில் சருமத்தை பழுது நீக்கி புத்துணர்ச்சியாக வைக்க செய்யும். 

பகலில் சருமத்தில் ஏற்பட்ட பாதிப்பை நீக்கும் வகையில் இரவில் சேதத்தை தவிர்க்க செய்கிறது. இரவு க்ரீம் பயன்பாட்டில் முக்கியமானது இவை தான். சரும சேதத்தை சரி செய்ய இரவு நேர க்ரீம்கள் பயன்பாடு அவசியம்.

இரவு நேரத்தில் க்ரீம்கள் பகலை காட்டிலும் அடர்த்தியானவை என்றாலும் இவை சருமத்தை மென்மையாக வைத்திருக்க செய்யும். சருமத்துக்கு ஆழமான நீரேற்றம் வழங்க உதவும். 

பகல் க்ரீம்.. நைட் கிரீம்.. இளமையாக இருக்க எதை யூஸ் பண்ணனும் !

தூங்கும் போது சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது. ஈரப்பதம் இழந்தால் சருமத்தில் வறட்சி அதிகரிக்கும். சருமம் பொலிவிழந்து காணப்படும். ஆனால் இரவு நேர க்ரீம் பயன்படுத்துவது சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. 

மறுநாள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்க உதவுகிறது. இரவு க்ரீம்கள், பகல் க்ரீம்கள் என்பது வெவ்வேறானவை. சிலர் ஒரே க்ரீம்களை இரண்டு நேரமும் பயன்படுத்துவதுண்டு. 

குண்டர் சட்டம் பற்றி தெரிந்து கொள்ள !

இதனால் சருமத்தில் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடலாம். சருமத்தின் தேவை வேறுபடுவதால் தனித்தனியாக பயன்படுத்துவது சருமத்தை இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க செய்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)