கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் அடிக்கடி கண்ணில் படும் பதிவுகள் என்று பார்த்தால் அது கருங்காலி பற்றியதாகத் தான் இருக்கிறது.
பிரபலங்கள் அணிந்திருக்கும் கருங்காலி மாலை முதல் அதில் செய்யப் பட்டிருக்கும் பொம்மைகள் வரை பலவிதமான பொருள்கள் பதியப்பட்டு வருகின்றன.
இதனால் ஒரு குரூப் கருங்காலி மாலைகள் எங்கும் கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருக்கின்றனர். கருங்காலி மாலைகளை அணிவது அதிர்ஷ்டம் தருமா, பணம் தருமா என்பதற்குள் நாம் செல்லவில்லை.
இந்தக் கருங்காலி மரத்தின் சிறப்புகள், பயன்பாடுகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.
சித்த மருத்துவர் வேலாயுதத்திடம் பேசிய போது, கருங்காலி மரம் தமிழ் நாட்டினுடைய பழைமை வாய்ந்த மர வகைகளில் ஒன்று. நாவல் மரம், அத்தி மரம், மருத மரம் போன்று மருத்துவ குணங்கள் நிறைந்த மரங்களில் கருங்காலி மரமும் ஒன்று.
இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ?
அத்தி, நாவல் மரங்கள் போன்றே இதுவும் துவர்ப்பு தன்மை உடையது. சித்த மருத்துவத்தில் துவர்ப்பு தன்மைக்காகக் கருங்காலி மரப்பட்டையும் பயன்படுத்தப் படுவதுண்டு.
உதாரணமாக பற்பொடி, நீரிழிவு நோய்க்கு கஷாயம், பால்வினை நோய்களுக்கான மருந்தாக கருங்காலி மரப்பட்டை பயன்படுத்தப் படுகிறது. கருங்காலி மிகவும் உறுதியான மரம் என்பதால் சாமி சிலைகள் செய்வதற்கு பயன்படுத்தப் படுகிறது.
வீடுகளில் நெல் குத்த, மாவு இடிக்க பயன்படுத்தப்படும் உலக்கைகளும் பெரும்பாலும் கருங்காலி மரத்தாலேயே செய்யப் பட்டவையாக இருக்கும்.
பண்டைய காலங்களில் மாதவிடாய் விலக்கின் போது, பெண்களுக்கு பாதுகாப்புக்காக இந்தக் கருங்காலி மரக்கட்டையை குறுக்கே போட்டிருப்பார்கள்.
இது உறுதியான மரம் என்பதால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை விரட்ட எளிதில் உடையாத இந்த மரக் கோல்களைத் தான் பயன்படுத்தி யிருக்கிறார்கள்.
எளிதில் உடையாத தன்மை கொண்டிருப்பதால் சாமி சிலைகள், கோயில் கலசங்கள், விக்ரகங்கள் போன்றவற்றை இந்த மரத்தால் செய்திருக்கிறார்கள்.
அதனால், இந்த மரத்தால் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஆன்மீகத் தன்மையை கூட்டி வியாபாரமாக்கி விட்டனர். உலகில் உள்ள அனைத்து மர வகை பொருள்களும் கதிர்வீச்சுகளை எதிர் கொள்ளும் தன்மையுடையவை.
ஆனால், இந்த மரத்தால் அதிர்ஷ்டம் வரும் போன்ற கூற்றுக் கெல்லாம் அறிவியல் ரீதியாக சான்றுகள் இல்லை. நாவல் மரம், அத்தி மரம் போன்று இதுவும் ஒரு உறுதியான வீரியமுடைய மருத்துவ குணமிக்க மரம் என்றார்.
மேட்டுப்பாளையம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் பால சுப்ரமணியத்திடம் பேசிய போது, பொதுவாகவே கருங்காலி மரங்கள், ஈரம் சார்ந்த இலையுதிர்க் காடுகளில் வளரக்கூடிய வகையாகும்.
இவை வளருவதற்கு 3,000 முதல் 4,000 மில்லி மீட்டர் மழை தேவை. காற்றில் அதிக ஈரப்பதம் இருக்க வேண்டும். மரங்களின் வைரம் பாய்ந்த பகுதி பொதுவாக பழுப்பு நிறத்தில் இருக்கும்.
ஆனால், இந்தக் கருங்காலி மரத்தில் வைரம் பாய்ந்த பகுதி கறுப்பு நிறத்தில் இருப்பதனால் இதற்கு, `கருங்காலி’ என்று பெயர் வந்தது.
கருங்காலி அதிக வலிமை வாய்ந்த, மிகவும் மதிப்புமிக்க மரம். தமிழ்நாடு போன்ற 900 எம்.எம் மழையளவு உள்ள பகுதிகளில் கருங்காலி மரங்கள் வளர்வது கடினம்.
இந்தியாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கருங்காலி மரங்கள் காணப்படும். இவற்றில் பல வகைகள் உள்ளன. அதில் ஆப்பிரிக்காவில் காணப்படுவது ஒரு வகை, இந்தியாவில் காணப்படுவது மற்றொரு வகை.
நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு?
மரங்களின் வைரம் பாய்ந்த பகுதியில் சில பெய்ட்டோ கெமிக்கல் காம்பவுண்டுகள் (Phyto chemical compounds) இருப்பது வழக்கம். அதை ஆன்மீக ரீதியாக எடுத்துச் சென்று, தற்போது வணிகம் ஆக்கி விட்டனர் என்றார்.
மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வரும் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி இறையழகனிடம் பேசிய போது, கருங்காலி மரம் தென்னிந்தியாவின் மரம்.
மற்ற மரங்களைப் போலவே மண்ணுக்கும் மக்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கக் கூடியது.
மரம், செடி கொடிகள் பற்றி அறியாதோர் மத்தியில் மரத்தை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களால் கிளப்பி விடப்பட்ட புரளிகளால் இந்த மரத்தைப் பற்றி தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அழிந்து வரும் மரங்களைக் காப்பாற்ற இவ்வாறு கதை சொல்வது மாறி இப்போது முழுவதும் வியாபார மயமாக்கப்பட்டு விட்டது. கருங்காலி மரக்கன்றுகளை போன வருஷம் என் பண்ணையில் வைத்தேன்.
என் பண்ணையுடைய சூழலை மாற்றியமைத் திருப்பதால் இங்கு ஓரளவுக்கு வளர்கிறது. என் பண்ணையில் மிளகும் நன்கு வளர்கிறது.
நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் - எதற்காக? எங்கு நடந்தது தெரியுமா?
மற்ற இடங்களில் இந்த மரங்களை வைத்து வளர்க்கும் விவசாயிகள், சீதோஷ்ண நிலையை அறிந்து கருங்காலி மரம் வளர்ப்பில் ஈடுபடலாம் என்றார்.