பள்ளி செல்லும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் உள்ள பெற்றோர் ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசனையிலேயே இருப்பார்கள்.
உங்கள் வீட்டில் வேர்க்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த வேர்க்கடலை கொண்டு வெரைட்டி ரைஸ் செய்யுங்கள். இந்த வேர்க்கடலை சாதம் மதிய வேளையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடியவாறு இருக்கும்.
வேர்க்கடலை நம்மை பொறுத்தவரை ஒரு சிறந்த சிற்றுண்டி. சிலர் வேக வைத்து, சிலர் வறுத்து, சிலர் கடலை மிட்டாயாக என பல்வேறு வடிவங்களில் எடுத்துக் கொள்வார்கள்.
மேலும் நாம் அடிக்கடி சாப்பிடும் மிக்சர் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களிலும் வேர்க்கடலை சேர்க்கப் படுகிறது. வேர்க்கடலை மோனோ மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் வளமான மூலமாகும்.
குழந்தைகளை உங்கள் அருகில் படுக்க வைக்கலாமா?
அவை உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களாக கருதப் படுகின்றன.
கார்போ ஹைட்ரேட்டுகள் குறைவாக இருந்தாலும், தாவர புரதங்கள் நிறைந்திருப்பதால், எந்தவொரு உணவு முறையையும் பின்பற்றுபவர் களுக்கும் வேர்க்கடலை புரதத்தின் சிறந்த ஆதாரமாக அமைகிறது.
வேர்க்கடலையில் வைட்டமின்கள் ஈ, பி1, பி3 மற்றும் பி9 மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
ஏன், இதை வேலைக்கு செல்பவர்களுக்கும் அலுவலகத்திற்கு கொண்டு செல்லலாம். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
பாசுமதி அரிசி - 1 1/2 கப்
வேர்க்கடலை - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
எள்ளு விதை - 1 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 பல்
வரமிளகாய் - 2-3
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதுசெய்முறை : .
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, தனியாக ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
பின்பு அந்த வாணலியில் பூண்டு, கறிவேப்பலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.
பிறகு எள்ளு, சீரகம் ஆகியவற்றை ஒரு நிமிடம் வறுத்து இறக்கி, அவற்றையும் குளிர வைக்க வேண்டும். அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொடித்துக் கொள்ள வேண்டும்.
செட்டிநாடு வாழைக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி?
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள வேர்க்கடலை பொடி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இறுதியாக குளிர வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறினால், சுவையான வேர்க்கடலை சாதம் தயார்.