திரிபலா சூரணம் உபயோகிக்கும் முறை தெரியுமா?





திரிபலா சூரணம் உபயோகிக்கும் முறை தெரியுமா?

0

திரிபலா வயிற்றுக்கு மிகவும் நன்மை விளைவிக்கிறது சிறுகுடல் மற்றும் பெருங்குடல் சுத்தம் செய்கிறது இதில் உள்ள தேவையற்ற கெடுதல் விளைவிக்கின்ற கிருமிகளை அழிக்கிறது மற்றும் சுத்தம் செய்கிறது. 

திரிபலா சூரணம் உபயோகிக்கும் முறை தெரியுமா?
உடலில் உள்ள தேவையற்ற கிருமிகள் மற்றும் அழுக்குகள் கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைவது எளிதான காரியமாக மாறி விடும் திரிபலா சூரணம் முதல் படி மும்மரமாக மேற்கொள்கிறது. 


மேலும் உடலில் உள்ள சதைகளை இருக்கி கட்டுடன் வைக்க உதவி செய்கிறது. மேலும் கொழுப்பு சத்தை வேகமாக குறைத்து உடல் எடையை குறைக்கவும் பெருமளவில் உதவி செய்கிறது. 

நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது தெரியுமா?

மேலும் இது கிருமி நாசினியாகவும் செயல்படுவதனால் உடலில் உள்ள தேவையற்ற கிருமிகள் பாக்டீரியாக்கள் போன்றவற்றை அழித்து விடுகிறது. திரிபலா சூரணத்தை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து விட வேண்டும். 


பின்பு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவது மிகவும் நன்மை விளைவிக்கும். உடல் எடையை குறைக்க இந்த முதல் முறை மிகவும் உதவி செய்கிறது.

இரண்டு டீஸ்பூன் அளவு திரிபலா பவுடருடன் சிறிது அளவு இலவங்கப் பட்டையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.


பின்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து விடவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நன்மை விளைவிக்கும். 


தேவைப்பட்டால் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேனை இதில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நன்மை விளைவிக்கும். கண்டிப்பாக இதை வெறும் வயிற்றில் செய்து வர வேண்டும். 


உடல் எடை குறைப்பவர்களுக்கு இந்த முறையும் நல்ல உபயோகமாக உள்ளதாக அமையும். திரிபலா சூரணத்தை வைத்து தேனீரும் தயாரிக்கலாம். 


திரிபலா சூரணத்தை வைத்து தேனீர் தயாரிக்க முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு திரிபலா பொடியை எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு விடவேண்டும்.

பின்பு சிறிதளவு ஆறும் வரை காத்திருக்க வேண்டும். பின்னர் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சைச் சாறு பிழிய வேண்டும்.

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் போக காரணம்?

பின்பு கொடுக்கலாம் இதை தொடர்ந்து செய்யும் பொழுது உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும் என்று கூறுகிறார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)