புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது. புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.
புதினாக் கீரை 60 கிராம் அளவில் எடுத்து 200 மில்லி தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து, இந்த தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
புதினா மருத்துவ மூலிகையாகும். இது வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், ஜெரிமான பிரச்சனையை சரி செய்யும். நறுமணத்திற்காக உணவிலும் புதினா சேர்க்கப்படுகிறது.
இதை சாப்பிட்டால் ஆஸ்துமா வருமாம் !
முந்திரியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்றவை இருக்கின்றன. இவை இரண்டும் கலந்து தயாரிக்கப்படும் புதினா முந்திரி பக்கோடாவில் தேவையான சத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன.
தேவையான பொருட்கள் . :
கடலை மாவு - 2 கப்
முந்திரி பருப்பு - 1 கப்அரிசி மாவு - 4 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
புதினா இலை - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவுசெய்முறை . :
பின்பு நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும். பிறகு முந்திரி பருப்பு சேர்த்து கலந்து விடவும். அடுத்து சூடான எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும்.
பின்பு அரைத்த புதினா கொத்தமல்லி சட்னி, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.
குளிக்கும் போது முதல்ல தண்ணிய எங்க ஊத்துவீங்க சொல்லுங்க !
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து சிறு சிறு உருண்டைகளாக மாவை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
அவ்வளவு தான் சுவையான புதினா முந்திரி பக்கோடா தயார்.