யாருக்குதான் பிடிக்காது என்று சொல்லப்படும் சில விஷயங்களில் பிரியாணிக்கு ஸ்பெஷலான இடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளை விட தற்போது பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
அதிலும் குறிப்பாக, லேயர் லேயராக அரிசி, காய்கறிகள் அல்லது சிக்கன்/மட்டன், மசாலாக்கள், வறுத்த வெங்காயம், மேலே நெய் என்று ஸ்லோ-குக்கிங் முறையில் செய்யப்படும் தம் பிரியாணியை விரும்பாதவர்களே இல்லை என்று கூறலாம்.
சுவையும் மணமும் நினைக்கும் போதே நாவில் எச்சில் ஊற வைக்கும். பல ரெசிபிக்களை செய்து பார்த்தாலும் தம் பிரியாணியில் ஏதோ ஒன்று குறைகிறதே என்று சிலருக்கு மனக்குறை இருக்கும்.
நீங்கள் வீட்டிலேயே சுவையான தம் பிரியாணி செய்ய வேண்டும் என்றால் இந்த மூன்று டிப்ஸ்களை பின்பற்றுங்கள்...
இந்திய உணவுகளில் பல வகையான நறுமணப் பொருட்கள் மற்றும் மசாலாக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் பெரும்பாலான சமயங்களில், சுவையும் மணமும், மொத்தமாக 15 to 20 பொருட்களில் இருந்து தான் கிடைக்கிறது.
அதாவது, நூற்றுகணக்கான இந்திய உணவுகள் வெவ்வேறு சுவைகளில் இருந்தாலும், அதில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பொருட்களைத் தான் பயன்படுத்துகிறோம்.
மசாலாக்கள் சேர்த்து இறைச்சி அல்லது காய்கறிகள் எவ்வாறு சமைக்கப் படுகிறது என்பதை பொறுத்து மாறுபடுகிறது. பிரியாணி சமைக்கும் போது அரிசியை கொஞ்ச நேரம் ஊற வைக்கும் பழக்கம் இருக்கிறது.
எனவே நீங்கள் ஊற வைத்த அரிசியை, சமைக்கும் பாத்திரத்திற்கு மாற்றும் போது அதை அப்படியே நேரடியாக மாற்றுங்கள். கைகளையோ, கரண்டியையோ பயன்படுத்தி அரிசியை எடுத்து போட வேண்டாம்.
அதாவது, அரிசி ஊற வைத்த பாத்திரத்திலிருந்து நேரடியாக சமைக்கும் பாத்திரத்துக்கு மாற்றுங்கள். எந்த உணவு சமைக்கும் போதும், மூடி வைத்து சமைத்தால், கேஸ் மிச்சம் ஆவதோடு மட்டுமல்லாமல், அதனுடைய சுவையும் மணமும் குறையாது.
எனவே, நீங்கள் பிரியாணி சமைக்கும் பொழுது சப்பாத்தி மாவைப் பயன்படுத்தி சமைக்கும் பாத்திரத்தை மூடும் பொழுது பாத்திரத்தின் விளிம்புகள் முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
பிரியாணி செய்த பிறகு, கேஸ் அல்லது அடுப்பை அணைத்த பிறகு கொஞ்ச நேரம் அப்படியே ஆற விடுங்கள். உடனடியாக பாத்திரத்தை திறக்க வேண்டாம்.
சிறிது நேரம் அப்படியே வைத்தால், அதிலிருந்து வெளிவரும் ஸ்டீம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும், தண்ணீர் இருந்தாலே தானாகவே குறைந்து விடும்.
சமைத்த பிறகு, உடனடியாக நீங்கள் பிரியாணி பாத்திரத்தை திறந்து விட்டால் அரிசி உடைந்து போகும் அல்லது சாதம் குழைந்து போகும்.