எந்த ஊர் பிரியாணி நல்லா இருக்கும்? தெரியுமா?





எந்த ஊர் பிரியாணி நல்லா இருக்கும்? தெரியுமா?

0

பிரியாணி பிடிக்காத ஆள் யாராவது இருக்க முடியுமா? சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி பிரியாணிக்கு என்றே தனி சுவையும் மணமும் உண்டு. 

எந்த ஊர் பிரியாணி நல்லா இருக்கும்? தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளை விட தற்போது பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. விதவிதமான, வகை வகையான பிரியாணி விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், வீட்டிலேயே செய்யக்கூடிய பிரியாணிக்கும் தனி மவுசு இருக்கிறது.

வாழ்க்கையில் ஒரு முறையாவது ஹோட்டல் ஸ்டைலில் பிரியாணி செய்து விட வேண்டும் என்று போராடுபவர்கள் ஏராளம். சரி வாங்க போகலாம். அதிலும் குறிப்பாக சில ஊர் பிரியாணி நன்றாக இருக்கும்.

1. சேலம் பிரியாணி . :

நான் சேலத்தை சேர்ந்தவன். கடைகளில் பிரியாணி அவ்வளவு சிறப்பு இல்லை ஆனால் சேலம் முஸ்லீம் இல்ல திருமணங்களில் செய்யப்படும் பிரியாணிகளின் சுவை அலாதி. 

இதெர்கென்று மூன்று தலைமுறைகளாக பிரியாணி சமைப்பவர்கள் இருக்கிறார்கள். அதனால் சேலம் பாய் வீட்டு கல்யாணம் என்றால் மிஸ் பண்ணிடாதீங்க. அப்புறம் வருத்த படுவீங்க.

நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?

சரி என்ன ஸ்பெஷல், மட்டன் சீரக சம்பா பிரியாணி தான், வெள்ளாட்டு கறியுடன், நல்ல மணக்கும் சீரக சம்பா அரிசியுடன் மணக்கும் இஞ்சி பூண்டு மசாலாவும் தக்காளியும் வெங்காயமும் போட்டி போட்டு கொண்டு சங்கமிக்கும். 

கடைசியாக ரவா பிர்னி ஒரு ரெண்டு கிளாஸ் குடித்தால் தான் வாழ்வின் பிறவி பயனை அடைந்த திருப்தி! 

அந்த கத்திரிக்கா கட்டாவை மறந்து விட்டேன். ஆனால் இந்த கல்யாண பிரியாணியில் இருக்கும் சுவை ஹோட்டல் கடைகளில் கிடைப்பது இல்லை.

2. ஆம்பூர் வாணியம்பாடி பிரியாணி . :

எந்த ஊர் பிரியாணி நல்லா இருக்கும்? தெரியுமா?

ஏற்கனவே வந்த பதிவுகளில் இதை குறிப்பிட்டு இருந்தாலும் என் கண்ணோட்டம் உங்களுக்கு. கட்டாயம் ஸ்டார் பிரியாணி தான் இங்கு டாப். நான்பார்த்த வரை மதியம் ஒரு பிரியாணி இரவு ஒரு பிரியாணி செய்வார்கள். 

அதாவது மதியம் சீரக சம்பா அரிசியில் மட்டன் பிரியாணி என்றால் பாசுமதி அரிசியில் சிக்கன் பிரியாணி இருக்கும். இரவு விற்கப்படும் பிரியாணி இது மாற்றப்படும். இது வடி பிரியாணி என்று அழைப்பார்கள். 

அதாவது கறியை நன்கு குழம்பில் சமைத்து அரிசியை முக்கால் பதம் வரும் போது வடித்து, இரண்டையும் பக்குவமாக கலந்து தம் விட்டு பரிமாறுவது வழக்கம். மசாலா அதிகமாக இருக்காது,

நெய் வாசனை தூக்கலாக இருக்கும். சென்ற முறை ஆம்பூருக்கு அருகில் இருக்கும் ஜைதூண் என்ற உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டோம் சிறந்த ருசி! கொஞ்சம் விலை அதிகம் ஆனால் காசுக்கேத்த தோசை ! சாரி பிரியாணி.

பேலியோ டயட் என்றால் என்ன?

3. சென்னை பிரியாணி . :

சென்னை பிரியாணி பெரும்பாலும் ஆம்பூர் பிரியாணி சுவையை ஒற்று இருக்கும். இருபது வருடங்களுக்கு முன் சென்னை ரங்கநாதன் தெருக்களில் இது மிகவும் பிரபலம் ஆனது. 

நீண்ட பாஸ்மதி அரிசியில் மட்டன், சிக்கன், முட்டை ஏன் காசு குறைவாக இருந்தால் கறி அகற்றி குஸ்காவக உங்கள் வயிற்றை நிரப்பும். இதில் கட்டாயம் சென்னையின் புகாரி உணவகத்தை குறிப்பிட வேண்டும். 

ஆனால் நான் அங்கு சாப்பிட்ட தில்லை. இங்கே சீரக சம்பா பிரியாணி கிடைக்கும் என்று கேள்வி பட்டு இருக்கேன்.

4. திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணி . :

எந்த ஊர் பிரியாணி நல்லா இருக்கும்? தெரியுமா?

கண்டிப்பாக சேலம் மக்களுக்கு இந்த பிரியாணி சுவை பிடிக்காது. சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணி வண்ணம், சுவை எல்லாம் வேற மாதிரி இருக்கும். 

நெய் நிறைய சேர்த்து, வறுத்து பொடித்த மாசலாக்களின் கலவையில் தைக்கப்பட்ட தொண்ணையில் பரிமாறுவது வழக்கம். 

என்னை பொறுத்த வரை அது நெய் மிளகு சோறு, ஆனாலும் அதுவும் ஒரு ருசி தான். ஆனா கூட சேரும் நண்பர்கள் இருக்கிறார்கள் கலக்கி, கோலா உருண்டை அவர்களை மிஸ் பண்ண கூடாது.

அட்லாண்டிக்கும் பசிபிக் பெருங்கடலும் கலக்கவில்லை ஏன்?

5. செட்டிநாட்டு பிரியாணி . :

காரைக்குடி பொதுவாக சைவத்திற்கு பெயர் போனது ஆனால் அங்கும் பிரியாணி சிறப்பு. இது பெரும்பாலும் சீரக சம்பா அல்லது பொன்னி அரிசியில் செய்வார்கள். 

அதிகம் தக்காளி சேர்க்காமல், மிளகாய் தூள் சேர்க்காமல் வெண்மையாக இருக்கும், அதனுடன் செட்டிநாட்டு சிக்கன் குருமா அல்லது வறுவல் சிறப்பு.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)