ஊமத்தை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் விளைகின்றது. உம்மத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு.
மக்கள் பொதுவாக சிவபெருமானுக்கு பூஜையில் இந்த ஊமத்தம் பூவை வைப்பார்கள். சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ இந்த ஊமத்தம் பூ. ஆனால் அது பல மருத்துவ குணங்கள் நிறைந்தது.
ஆனால் உண்மையில், ஊமத்தம் பழம் மிகவும் விஷமாக கருதப்படுகிறது. அதன் பயன்பாடு உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆனால், ஊமத்தம் செடி மற்றும் பூ மருந்தாகவும் பயன்படுகிறது என்பது வெகு சிலருக்கே தெரியும்.
பல இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. ஆனால் ஒரு சில இனங்கள் மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நோய்களுக்கான சிகிச்சையில் பயனுள்ளதாக இருக்கும்
ஆயுர்வேதத்தில் உமத்தை ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
முடி உதிர்தல், பொடுகு, குவியல், ஆஸ்துமா, சுவாசம் மற்றும் நுரையீரல் மற்றும் மார்பில் சளி சேர்தல் போன்ற நோய்கள், ஆண்மைக் குறைவு மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த இலையின் பொடிகள் கடைகளில் விற்கப்படுகிறது. இந்த நல்லெண்ணையில் சேர்த்து காய்ச்சி, தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்து வரலாம்.
இதனால், தலையிலுள்ள அரிப்பு, புண்கள், பொடுகு, பேன் தொல்லை நீங்கும். இந்த இலைகளை அடுப்பில் இட்டு, விளக்கெண்ணை தடவி வதக்க வேண்டும்.
பிறகு, இலைகளை உடம்பில் எங்கு வலி உள்ளதோ, அங்கு வைத்து கட்டினால், வலிகள், வீக்கங்கள் குறையும். கைகால் மூட்டு வலிகள், மூட்டு வீக்கம், போன்ற வற்றுக்கும், இந்த ஊமத்தை இலைகளை இப்படி ஒத்தடம் தருவதற்கு பயன்படுத்தலாம்.
தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலி ஏற்பட்டாலும், இந்த இலைகள் தீர்வாகின்றன. உடலில் அடிபட்டு நெறிகட்டி, உயிர் போகும் அளவுக்கு வலியை தந்துவிடும். அதற்கும் இந்த இலைகள் உதவுகின்றன.
பேய் ஓட்டுவதாக கூறிய சாமியார் - கதறி அழுத பெண் !
இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டு போலச் செய்து புகை பிடிப்பது போல புகையை உள்ளிழுத்து வெளியிடுவதால் சுவாச காச நோய் குணமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு செய்யலாம்.
தலைச்சுற்றல், வாய்க் குமட்டல் போன்றவை ஏற்பட்டால் உடனே மேற்கூறியவாறு செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
தேள், பூரான், வண்டு கடித்து விட்டால், ஊமத்தை இலைகளுடன், சிறிது மஞ்சள் தூள் அரைத்து பற்று போல போட வேண்டும். இதனால், பூச்சிக் கடியால் ஏற்பட்ட வீக்கம் கரைந்து விடும்.
வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட வேண்டும்.
கொள்ளையனிடம் நகைகளை வாங்கி கொண்ட பிரபல நடிகை !
பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் சிறிதளவு சேர்த்து, அரைத்து, தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர, தலைப்பேன்கள் குறையும். முடி வளரத் தொடங்கும்.