அருமையான கனவா மீன் குழம்பு செய்வது எப்படி?





அருமையான கனவா மீன் குழம்பு செய்வது எப்படி?

0
விடுமுறை நாட்களில் நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்தளிக்கும் வகையில் பல சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிட அனைவருமே விரும்புவோம். 

அருமையான கனவா மீன் குழம்பு செய்வது எப்படி?
நீங்கள் இந்த வாரம் மீன் எடுக்க நினைத்தால் கனவா மீனை எடுங்கள். அந்த கனவா மீனைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த கனவா மீன் குழம்பு செய்வது மிகவும் சுலபம். 

15 நிமிடத்தில் மணமணக்கும் ருசியான கனவா மீனை செய்துவிடலாம். முக்கியமாக இந்த குழம்பு பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது.
 
கனவா மீன் குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப் பட்டுள்ள செய்முறையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் : .
 
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
 
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
 
கறிவேப்பிலை - சிறிது
 
வெங்காயம் - 1 (நறுக்கியது)
 
தக்காளி - 1 (நறுக்கியது)
 
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
 
உப்பு - சுவைக்கேற்ப
 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
 
கனவா மீன் - 250 கிராம்
 
தேங்காய் மசாலாவிற்கு...
துருவிய தேங்காய் - 1 கப்
 
சின்ன வெங்காயம் - 6 (நறுக்கியது)
 
மல்லி விதைகள் - 3 டேபிள் ஸ்பூன்
 
வரமிளகாய் - 12
 
சோம்பு - 1 டீஸ்பூன்
 
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை : .
அருமையான கனவா மீன் குழம்பு செய்வது எப்படி?
முதலில் கனவா மீனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக ரோஸ்ட் செய்து, 

அத்துடன் மல்லி, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சோம்பு, வரமிளகாய் சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
 
பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் கனவா மீனை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
 
அடுத்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைகேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 

பின் அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து, 15-20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கனவா மீன் வெந்ததும், அடுப்பை அணைத்து விட்டு இறக்கினால், சுவையான கனவா மீன் குழம்பு தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)