இந்த பிரச்சனைகள் இருந்தா மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் !





இந்த பிரச்சனைகள் இருந்தா மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் !

0

ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படும் மஞ்சள் நம் சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலா. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும். 

இந்த பிரச்சனைகள் இருந்தா மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் !
மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக, பல சுகாதார நிபுணர்கள் இதை தொடர்ந்து சாப்பிட பரிந்துரைக்கின்றனர். 

இருப்பினும், மஞ்சள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதில்லை. எந்தெந்த நபர்கள் மஞ்சளை அதிகம் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம், 

இல்லையெனில் அவர்களின் உடல்நிலை மோசமடையக் கூடும். இதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

மஞ்சள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பொருள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. மஞ்சளில் குர்குமின் உள்ளதால், பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. 

வலியை போக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால், சில ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள் மஞ்சளை உட்கொள்வதில் மிகுந்த கவனம் தேவை. இதைச் செய்யாவிட்டால், மஞ்சளால் ஏற்படும் பக்க விளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.

நீங்கள் கீழ்கண்ட நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தால் மஞ்சளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும் . :

பித்தப்பையில் கல் உள்ள நோயாளிகள் . :

இந்த பிரச்சனைகள் இருந்தா மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் !

பித்தப்பையில் கல் மிகவும் சிக்கலான நோய், இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் மிகவும் வலியை சந்திக்க வேண்டும், இந்த விஷயத்தில், மஞ்சள் உட்கொள்வதை குறைக்கவும். 

இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம். அடிக்கடி கல் பிரச்சனையினால் பாதிக்கப் படுபவர்கள், மஞ்சளை உட்கொள்வதால், இந்த பிரச்சனையை தீவிர படுத்தும். 

எனவே, அவர்கள் மஞ்சளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது. மேலும், அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் . :

நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்கள் பொதுவாக தங்கள் இரத்தத்தை மெல்லிதாக்கும் பல மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதே போல் அவர்கள் குளுக்கோஸின் அளவையும் கட்டுப்படுத்த மருத்துகள் எடுத்துக் கொள்கின்றனர். 

நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால், அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவு கணிசமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது, இது உடலுக்கு நல்லதல்ல.

இரத்தப்போக்கு அதிகம் உள்ள நோயாளிகள் . :

மூக்கில் அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் இரத்தப்போக்கு ஏற்படும் நிலை உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். 

இல்லையெனில் அளவிற்கு அதிகமான மஞ்சளால் இரத்தப்போக்கு அதிகரித்து உடலில் இரத்த சோகை ஏற்படலாம். இது பின்னர் பலவீனத்திற்கு காரணமாகி விடும்.

மஞ்சள் காமாலை நோயாளிகள் . :

இந்த பிரச்சனைகள் இருந்தா மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள் !

மஞ்சள் காமாலை உள்ளவர்கள், மஞ்சள் காமாலையை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நீங்கள் மஞ்சள் சாப்பிட விரும்பினால், அதற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். 

இல்லையெனில் உங்கள் உடல்நிலை மோசமடையலாம். ஏனெனில் மஞ்சள் அதிகம் சாப்பிடுவதினால் சீரம் பிலிரூபின் அளவு அதிகரிக்கும். 

மஞ்சள் காமாலை நோயிலிருந்து மீண்ட பிறகும், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மஞ்சள் உட்கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)