மொறு மொறுன்னு மீன் வறுவல் செய்வது எப்படி?





மொறு மொறுன்னு மீன் வறுவல் செய்வது எப்படி?

0

மற்ற உணவுகளை போல் இல்லாமல் கொழுப்பு வகை மீன்களான சால்மன், டிரௌட், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி ஆகியவை உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. 

மொறு மொறுன்னு மீன் வறுவல் செய்வது எப்படி?
முக்கியமாக ஒமிகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது. 

மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது. மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

பொதுவாக வீடுகளில் மீன் வாங்கினால் அன்றைய சமையலில் கண்டிப்பாக மீன் வறுவல் அன்று இடம் பெறும். சிலருக்கு குழம்பு மீனை விட ஃப்ரை செய்த மீனை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.

நோய்களை மாயமாக்கும் தேங்காய் மாயா ஜாலம் !

குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த மீன் வறுவலை எவ்வாறு ஜூஸியாக செய்யலாம் என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் : .

மீன் மரினேட் செய்ய தேவையானவை : .

மீன் துண்டுகள்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய கறிவேப்பிலை - 2 டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன்

உப்பு - 1.25 தேக்கரண்டி

மற்ற பொருட்கள் : .

எண்ணெய்

கறிவேப்பிலை - சிறிதளவு

ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம் !

செய்முறை : .

மொறு மொறுன்னு மீன் வறுவல் செய்வது எப்படி?

முதலில் மீன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த மீன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், 

கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, எண்ணெய், தேவையான அளவு உப்பு, மற்றும் நறுக்கிய கறிவேப்பிலை & கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் மரினேட் செய்து தனியாக வைக்கவும்.

அடுத்து அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். 

எண்ணெய் சூடானதும் மீன் துண்டுகளை அருகருகே வைத்து மிதமான தீயில் 3 நிமிடம் வறுக்கவும். பிறகு தீயை குறைத்து மேலும் 3 நிமிடங்களுக்கு தொடர்ந்து வறுக்கவும்.

பற்களை பாதுகாப்பது அவசியம் !

இப்போது மீன் துண்டுகளை மறுபுறம் திருப்பி மறுபுறம் மிதமான தீயில் 3 நிமிடம் வறுக்கவும். பின்னர் குறைந்த வெப்பத்தில் மற்றொரு 3 நிமிடங்கள் வறுக்கவும்.

பிறகு அதன் மென் கறிவேப்பிலை இலைகளை தூவி கொள்ளுங்கள். பிறகு அதை மீண்டும் திருப்பி இருபுறமும் 2 நிமிடங்களுக்கு குறைந்த வெப்பத்தில் தொடர்ந்து வறுத்து எடுத்தால் ருசியான மீன் வறுவல் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)