கலர்புல்லான குங்குமம் தயார் செய்வது எப்படி?





கலர்புல்லான குங்குமம் தயார் செய்வது எப்படி?

0

சுத்தமான குங்குமம் குண்டு மஞ்சள் அல்லது விரலி மஞ்சளை சிறியதாக உடைத்து அது முழுதுமாக முழுகும் அளவில் எலுமிச்சம் சாறு மற்றும் படிகார கரைசலில் ஊர விட வேண்டும். 

கலர்புல்லான குங்குமம் தயார் செய்வது எப்படி?
பின்னர் தினமும் நிழலில் உலர்த்தி மீண்டும் மீண்டும் அந்த சாறு முழுமையும் அதில் ஏறும் வண்ணம் செய்து பின்னர் துணியில் போட்டு மேலும் ஒரு துணியால் மூடி காய வைத்து அதற்கான தனி இயந்திரத்தில் அரைத்து சலித்து கொள்ள வேண்டியது தான்.

இது தான் மஞ்சள் குங்குமம் என்பது. இதை ஒரு பேப்பர் ரயில் மடித்து விட்டு திரும்பவும் பிரித்து பார்த்தால் பேப்பரில் மஞ்சள் நிறம் மட்டுமே ஒட்டியிருக்கும். இதுவே சுத்தமான மஞ்சள் குங்குமம்.

ஆட்டோபான் நெடுஞ்சாலையின் சாலை விதிகள் !

தேவையானவை . : 

குண்டு மஞ்சள் - 100 கிராம்

வெண்காரம் - 10 கிராம்

படிகாரம் - 10 கிராம்

நல்லெண்ணெய் - தேவையான அளவு

எலுமிச்சை சாறு - அரை மூடி

செய்முறை . : 

கலர்புல்லான குங்குமம் தயார் செய்வது எப்படி?

வெண்காரம், படிகாரம் உடைத்து வைத்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் இரண்டையும் தனித்தனியாக போட்டு பொடி செய்யவும். நன்கு பொடி செய்ததும் இவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

இரண்டையும் சேர்த்து அரைக்கும் போது அதன் நிறம் பழுப்பு நிறமாகி கொஞ்சம் ஈரப்பசையுடன் இருக்கும்.

மஞ்சளை சிறு சிறு துண்டாக உடைத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடித்து சல்லடையில் சலித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு முழு எலுமிச்சைப் பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். 

பொடித்து வைத்துள்ள மஞ்சள் மற்றும் வெண்காரம், படிகாரத்தை தயாராக எடுத்து வைக்கவும். எலுமிச்சைப்பழ சாறுடன் பொடித்து வைத்துள்ள வெண்காரம், படிகாரத்தை கலந்து வைக்கவும். 

இந்த கரைசலுடன் மஞ்சள் பொடியை கலந்து தட்டில் வைத்து பரப்பி உலர விடவும். நன்கு உலர்ந்தப் பிறகு செங்கல் தூள் நிறத்தில் இருக்கும். அதில் நல்லெண்ணெயை சிறிது சிறிதாக சேர்த்து லேசாக பிசறி விடவும். 

அப்போது தான் நல்ல டார்க் மெரூன் நிறத்தில் குங்குமம் கிடைக்கும். மஞ்சளின் வாசனையுடன் ஒரிஜினல் குங்குமம் ரெடி. 

சர்வதேச விண்வெளி நிலையத்தை நாமும் வானில் பார்க்கலாம் !
குறிப்பு . :

சில இடங்களில் குங்குமம் மல்லிகை, தாழம்பூ மணத்துடன் இருக்கும். இந்த குங்குமத்துடன் மல்லிகை, தாழம்பூ எசன்ஸ்களை இரண்டு, மூன்று துளி விட்டு கலந்து விடவும். 

நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதால் உடலில் உஷ்ண நிலையை சரிசமமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)