சாப்பிடலாம் வாங்க புளியந்தளிர்... நோய் இல்லாமல் இருக்க !





சாப்பிடலாம் வாங்க புளியந்தளிர்... நோய் இல்லாமல் இருக்க !

0

ரத்தச் சோகைக்கு கேரட், பீட்ரூட், தக்காளி, முட்டைகோஸ் சாப்பிடலாம். ஆஸ்துமாவுக்கு தேன், கேரட், அன்னாசிப் பழம் சாப்பிடலாம். 

சாப்பிடலாம் வாங்க புளியந்தளிர்... நோய் இல்லாமல் இருக்க !
சர்க்கரை நோய்க்கு முளைவிட்ட சிறு தானியங்கள், பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி சாப்பிடலாம். வயிற்றுப் புண்ணுக்கு கேரட், பூசணி சாப்பிடலாம். 

இதய நோய்க்கு ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அன்னாசிப் பழங்களைச் சாப்பிடலாம். கொழுப்பு குறைய கொள்ளு, கேரட் நிறைய சாப்பிடலாம். 

சளித் தொல்லைக்கு துளசி இலைச்சாறு, ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறு சாப்பிடலாம். முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்து உண்ண வாய் கசப்பு குணமாகும். 

(getCard) #type=(post) #title=(You might Like)

புளியந்தளிர்

புளியந்தளிரை துவையலாக்கி, உண்ண வயிற்று மந்தம் தீரும். நாள்தோறும் ஒரு பப்பாளித் துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

புளி, தினசரி உணவில் இடம் பெறும் முக்கிய பொருள். புளியின் தளிர் இலை மருத்துவ குணம் நிறைந்தது. இதில் உணவு தயாரிக்கலாம். புளியந்தளிருடன், பருப்பு சேர்த்து கூட்டு, துவையல் செய்து சாப்பிடலாம். 

புளியந்தளிருக்கும், முதிர்ந்த புளி இலைக்கும் சில குணங்கள் உண்டு. உடலில் ஏற்படும் புண்ணை ஆற்றும். எத்தகைய புண்ணையும் குணப்படுத்தும் வல்லமையுண்டு. 

குளிர் உடல்வாகு உள்ளவர்களுக்கு நோய்கள் தொல்லை தரும்; அவர்கள், புளியந்தளிரை அடிக்கடி சாப்பிட்டு வர, உடலில் உஷ்ணம் உண்டாகும்; நோய்கள் மறையும்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)