கிரிஸ்பியான கேழ்வரகு மிச்சர் செய்வது எப்படி?





கிரிஸ்பியான கேழ்வரகு மிச்சர் செய்வது எப்படி?

0

தீபாவளிக்கு கடையில் தான் வாங்குவோம். அப்படி இல்லையா, வீட்டிலேயே செய்ய வேண்டுமா? கடலை மாவு பிசைந்து எண்ணெயில் சுட்டு எடுத்து பின்பு மற்ற பொருட்களை வறுத்து ஒன்றாக கலந்து மிச்சர் செய்வோம்.

கிரிஸ்பியான கேழ்வரகு மிச்சர் செய்வது எப்படி?
ஆனால் இந்த தீபாவளிக்கு கேழ்வரகு வைத்து மிஸ்ட்டர் செய்து பாருங்களேன்  ஒரு பாக்கெட் சேமியா இருக்கா. நச்சுன்னு மொறு மொறுன்னு சூப்பரா இந்த மிக்சரை செய்து அசத்துங்க.

ஆரோக்கியமான குழந்தைகள் சிற்றுண்டி கேழ்வரகு மிச்சர். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சுவையான மற்றும் சிறப்பு சிற்றுண்டி.  

குழந்தைகளுக்கான சிறந்த மாலை நேர சிற்றுண்டி மற்றும் நாளின் எந்த நேரத்திலும் உண்ணலாம் மற்றும் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கலாம். 

இந்த சிற்றுண்டி ராகி மாவில் இருந்து தயாரிக்கப்படும் மிகவும் சத்தான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டிகளில் ஒன்றாகும். வாங்க இந்த கேழ்வரகு மிச்சர் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் . : 

கேழ்வரகு மாவு - 2 கப்  

வேர்க்கடலை - 1/4 கப்  

மிளகாய்த்தூள்- 4 ஸ்பூன்  

பொட்டுக்கடலை - 1/4 கப்  

எண்ணெய் பொறிக்க - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

செய்முறை . :

கிரிஸ்பியான கேழ்வரகு மிச்சர் செய்வது எப்படி?

கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.  அதில், தேவையான உப்பு அரைத்து சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.  

அந்த மாவை மிக்சர் பிழியும் நாழியில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன், தலா 50 கிராம் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பொரித்த அவல் சேர்த்து கிளறவும். கேழ்வரகு மிக்சர் ரெடி!

பயன்கள் . :

ராகி கனிமங்களின் வளமான ஆதாரம் மற்றும் குறைந்த கிளைகோமிக் குறியீட்டுடன் அதிக புரத உள்ளது. 

கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் என அனைத்து சத்துக்களும் இருப்பதால் உடலுக்கு வலுவைக் கூட்டுவதில் முதலிடத்தில் இருக்கிறது. 

இது தவிர, பீட்டா கரோட்டின், நியாசின், ரிபோப்ளேவின் போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. 

இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகையை தடுக்கிறது. தோல் அலர்ஜியை நீக்கும். சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் க‌ட்டுக்குள் இருக்கும். 

உடலுக்கு வலிமை தரும்.  உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)