மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?





மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?

0

தினமும் 1 டீஸ்பூன் நெய் சாப்பிடுவது உடலுக்கு பல அதிசய நன்மைகளை தருகிறது. காலையில் தூங்கி எழுந்ததும் அரை ஸ்பூன் நெய்யை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்களுடைய உடலில் நிறைய நல்ல மாற்றங்கள் தெரியும். 

மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?
இது இரைப்பை குடல் பாதையில் அமில PH அளவுகளை குறைக்கிறது. இதனால் செரிமானமும், வளர்ச்சிதை மாற்றமும் சீராக இருக்கும். நெய் மலமிளக்கியாக செயல்படுவதால் குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. 

உடலில் உள்ள தேவையற்ற சத்துக்களை வெளியேற்றவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது. இந்த வாரம் வீட்டில் ஸ்பெஷலாக என்ன சமைத்து சாப்பிடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? 

உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கப் போகிறீர்களா? அப்படியானால் சன்டே ஸ்பெஷலாக மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்யுங்கள்.

இந்த நெய் ரோஸ்ட் வித்தியாசமான சுவையுடன், சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். 

பாஸ்மதி தயிர் சாதம் செய்வது எப்படி?

முக்கியமாக இதை செய்வது மிகவும் ஈஸி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அற்புதமாக இருக்கும்.

சரி இனி மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் : .

சிக்கன் - 1/2 கிலோ (சிறு துண்டுகளாக வெட்டப்பட்டது)

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

தயிர் - 3 டேபிள் ஸ்பூன்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

வெல்லம் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

நெய் ரோஸ்ட் மசாலாவிற்கு...

புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

மல்லி - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 6

கிராம்பு - 2

பூண்டு - 4

பேலியோ டயட் உணவு முறை பலன் தரக்கூடியது?

செய்முறை : .

மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் செய்வது எப்படி?

முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் கழுவிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், வெந்தயம், சீரகம், மல்லி, கிராம்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பூண்டு மற்றும் புளி பேஸ்ட் சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டிலேயே துணி முகக் கவசம் தயாரிப்பது எப்படி?

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள நெய் ரோஸ்ட் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, நெய் தனியே பிரிந்து மேலே மிதக்கும் வரை வேக வைக்க வேண்டும்.

இறுதியாக அதில் வெல்லம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, இறக்கினால், சுவையான மங்களூரியன் சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)