வளரும் குழந்தைகளுக்கு அவல் மிகச் சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள். அவலைப் பால் அல்லது தண்ணீரில் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம்.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும், உடலை உறுதியாக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். மூளைச் செல்களை புத்துணர்ச்சியாக்கும்.
இப்போது கடைகளில் சிற்றுண்டிகள் வாங்குவதற்கு பதிலாக சில எளிமையான ஸ்நாக்ஸ்களை வீட்டிலேயே செய்யலாம். அப்படி ஈஷியாக செய்யக்கூடிய ஒன்று தான் இந்த அவல் பர்பி.வாங்க எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் . :
அவல்
தேங்காய் துருவல்
நெய்
பால்
ஏலக்காய்
சக்கரை
உப்பு
முந்திரி
திராட்சை
செய்முறை . :
அதில் ஊறிய அவலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் அரை கப் அளவிற்கு தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைக் கப் பால் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதில் மணத்திற்கு கொஞ்சம் ஏலக்காய் பவுரை சேர்த்து கொள்ள வேண்டும்.
அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் முக்கால் கப் அளவு சர்க்கரையை சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அது கெட்டியான பதத்திற்கு வரும் போது அப்படியே ஒரு நெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
அதன் மேல் பகுதியில் கொஞ்சம் முந்திரி திராட்சையை சேர்த்து சமப்படுத்தி விட வேண்டும். கொஞ்சம் பர்பி ஆறிய பிறகு அதை வேறு ஒரு தட்டிற்கு மாற்றி அதை தேவையான வடிவத்தில் நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
குறிப்பு . :
இதில் லேசான அவலுக்கு பதிலாக வெள்ளை அவலை சேர்க்கலாம். அதே போல் சீனிக்கு பதிலாக கரும்பு சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்.