இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு நகரங்களுக்கும் தனித்தனியான பாரம்பரிய உணவு வகைகள் உள்ளன. ஏன் சில பொதுவான உணவுகள் கூட ஒவ்வொரு நகரத்திற்கும் ஏற்றார் போல் வெவ்வேறு சுவையில் இருக்கும்.
அதனால் தான், மட்டனுக்கான மவுசு எப்போதுமே உயர்ந்து காணப்படுகிறது. உடலுக்கு தீங்கு என்று சொல்லியே, சிலர் ஆட்டுக்கறியை ஒதுக்கி வைத்து விட்டார்கள்.
சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மட்டும் இந்த ஆட்டுக்கறியை தொடவே கூடாது.
ஆனால், உடல் ஆரோக்கியம் மிக்கவர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என யாராக இருந்தாலம், மாதம் ஒரு முறையாவது, குறைந்த அளவில் மட்டன் சாப்பிட்டால், உடலுக்கு வலு கிடைக்கும்.
உடல் சூடு தணியும்.. சருமத்துக்கான பளபளப்பு கூடும்.. பார்வை கோளாறுகள் நீங்கும். சுவையான பிரியாணி என்றால் பலருக்கும் ஹைதராபாத் தான் ஞாபகத்திற்கு வரும்.
சோம்பு சேர்த்த உணவை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் என்ன?
ஆனால் ஹைதராபாத்தில் தயாரிக்கப்படும் மட்டன் குழம்பை ஒருமுறை சாப்பிட்டால் கண்டிப்பாக திரும்ப திரும்ப சாப்பிட விரும்புவீர்கள்.
ஹைதராபாத் ஸ்டைலில் மட்டன் குழம்பை சுவையாக வீட்டிலேயே எளிதாக எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மரினேட் செய்ய தேவையானவை : .
மட்டன் - 1 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
அடித்த கெட்டியான தயிர் - 200 மி.லி
உப்பு - 2 டீஸ்பூன்
மற்ற பொருட்கள் : .
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் -3
சமையல் எண்ணெய் - 4-5 டேபிள் ஸ்பூன்
காரவே விதைகள் (Shahjeera) - 3/4 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 6
கிராம்பு - 6
இலவங்கப்பட்டை - 3
பிரியாணி இலை - 2
கசூரி மேத்தி - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் - கைப்பிடி
புதினா இலைகள் - கைப்பிடி
சுவையான ஸ்ட்ராபெர்ரி கிராக்கர்ஸ் செய்வது எப்படி?
செய்முறை : .
பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் காரவே விதைகள் போட்டு பொரிந்ததும் கிராம்பு, பட்டை, பச்சை ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கி பழுப்பு நிறமாக மாறியவுடன் மரினேட் செய்யப்பட்ட மட்டனை சேர்த்து நன்றாக கலந்து சுமார் 4 நிமிடங்களுக்கு அதிக வெப்பத்தில் சமைக்கவும்.
ஹெல்தியான சிவப்பு அவல் தரும் நன்மைகள் !
பிறகு மட்டனை 7 நிமிடங்களுக்கு மிதமான வெப்பத்தில் தொடர்ந்து சமைக்கவும்.
மட்டன் ஓரளவிற்கு வெந்து நிறம் மாறி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய கொத்த மல்லி, புதினா இலைகள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விட்டு மிதமான தீயில் மூன்று நிமிடங்கள் சமைக்கவும்.
பின்னர் அதனுடன் வறுத்து பொடித்த கசூரி மேத்தியைச் சேர்த்து கலந்து மற்றொரு 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும்.
குறிப்பு : .
முதல் விசில் வரை அதிக வெப்பத்திலும் பின்னர் மிதமான தீயில் மற்றொரு 3 விசில் என சுமார் 15-18 நிமிடங்கள் ஆகும். பிரஷர் அடங்கியவுடன் மூடியை திறந்து பார்த்தால் சுவையான ஹைதராபாத் மட்டன் குழம்பு பரிமாற தயாராக இருக்கும்.