உச்சந்தலை நீரை நீக்கும் நொச்சி இலை.. நொச்சியிலை தலையணை தெரியுமா?





உச்சந்தலை நீரை நீக்கும் நொச்சி இலை.. நொச்சியிலை தலையணை தெரியுமா?

0

நுரையீரலின் நண்பன் என்று சொல்லக் கூடியது தான் நொச்சி இலைகள். அதென்ன நொச்சி தலையணைகள்? இதன் பயன்கள் என்னென்ன தெரியுமா?

உச்சந்தலை நீரை நீக்கும் நொச்சி இலை.. நொச்சியிலை தலையணை தெரியுமா?
நொச்சி இலைகளை எரித்து, அந்த புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் ஓடி விடும். இந்த இலைகளுடன் மிளகு, பூண்டு, கிராம்பு சேர்த்து மென்று தின்றாலே ஆஸ்துமா மெல்ல குணமாகி விடும்.

நொச்சி இலை: கொதிக்கும் நீரில், நொச்சி இலையுடன் கற்பூரவல்லி இலையையும் சேர்த்து, ஆவி பிடித்தாலே, இறுகி கிடக்கும் நெஞ்சு சளி கரைய ஆரம்பிக்கும். 

வேப்பிலையை போலவே, இந்த இலையையும் நீரில் சேர்த்து குளித்து வந்தால், உடல் வலி தீர்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும். புத்துணர்ச்சிக்கும், உடல் வலி நீங்கவும் பயன்படுத்தப்படும் இந்த நொச்சி இலைகள், சுவாச கோளாறுகளை நீக்கக் கூடியது. 

இந்த இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி, அந்த நீரில் பிரசவித்த தாய்மார்களை, குளிக்க வைத்தால், உடல் வலி, அசதிகள் நீங்கிவிடும். நரம்புகளுக்கும் வலுவேற்ற உதவும். 

மாதவிலக்கையும் தூண்டி விடக்கூடிய தன்மை கொண்டது இந்த இலைகள்.

ஒரு நாள் சம்பளம் 25 லட்சம்.. ராம் ஜெத்மலானி பற்றி அறியாத உண்மைகள் !

கொசுக்கள்: 

நொச்சி இலையுடன் வேப்பிலையும் சேர்த்து எரித்து புகை போட்டால், கொசுக்களும், சிறுபூச்சிகளும் ஓடிவிடும். அதே போல, நொச்சி இலைகள் வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கக்கூடியது. 

கொடிய பாம்பின் விஷத்தையும் முறிக்கக் கூடியது. பருக்கள், கொப்புளங்கள், அல்லது தேமல்களுக்கு இந்த இலையின் சாறு மட்டுமே போதும். இந்த இலைகளை வைத்து தலையணை செய்வார்கள். 

மெல்லிய பருத்தி துணியில் தலையணை போன்று செய்து, அதற்குள் காம்புகள் அவ்வளவாக இல்லாத நொச்சி இலைகளை உள்ளே வைத்து தைத்தாலே, நொச்சி தலையணை ரெடி. தேவைப்பட்டால், சிறிது மருதாணி இலைகளை பூக்களுடன் சேர்த்து தலையணைக்குள் வைத்து தைக்கலாம். 

இந்த தலைகாணியை ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். இலைகள் காய்ந்ததும் வேறு தலையணையை தைத்து கொள்ளலாம்.

அற்புத பலன்கள்: 

உச்சந்தலை நீரை நீக்கும் நொச்சி இலை.. நொச்சியிலை தலையணை தெரியுமா?

இந்த தலையணையை வைத்து தூங்கும் போது, நன்றாக தூக்கம் வரும். கழுத்துவலி, தலைவலி, சைனஸ் பிரச்சனைக்கு நிவாரணம் கிடைக்கும். 

தூங்கும் போது மூக்கடைப்பு, தலைபாரம் தொந்தரவுகள் நீங்கி சுகமான தூக்கம் கிடைக்கும். மண்டைக்குள் இருக்கும் நீரும் வியர்வையாய் வெளியே வந்து விடும். 

வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

கை, கால் முட்டி வலி இருந்தாலும் கூட, இந்த இலையை கசக்கி துணியில் வைத்து கட்டினாலே, அந்த வலிகள் மெல்ல குறைய துவங்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)