யாரும் சொல்லாத புதுமையான சமையல் டிப்ஸ் !





யாரும் சொல்லாத புதுமையான சமையல் டிப்ஸ் !

0

சமையல் என்பது முழு மனத்துடன் ஈடுபாடு காட்டி செய்ய வேண்டிய ஒரு கலை. இதில், பல்வேறு நுணுக்கங்கள் அடங்கியுள்ளன. சமையல் செய்வதை விட பயன்படுத்தப்படும் பொருட்கள் கெட்டு போகாமல் பாதுகாப்பதும் நமது கடமை தான். 

யாரும் சொல்லாத புதுமையான சமையல் டிப்ஸ் !
இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக 8 பயனுள்ள குறிப்புகளை இங்கு காணலாம்.

நெய் எவ்வளவு நாளானாலும் கெட்டுப் போகாமல் இருக்க, அதில் ஒரு வெல்லத் துண்டை போட்டு வைக்கலாம். 

ஆப்பிள் புளிப்பாக இருந்தால், தோல் சீவி, நறுக்கி, உப்பு, மிளகாய் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார். 

கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமான தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாறு விட்டு, அதில் காய்கறிகளை போட்டு வைத்தால் காய்கறிகள் பிரஷ்ஷாக இருக்கும்.

(getCard) #type=(post) #title=(You might Like)

ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால், தயிர் புளிக்காமல் இருக்கும். கோதுமை மாவை நன்கு சலித்து, சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராமல் இருக்கும்

தக்காளி, எலுமிச்சம்பழம் சீக்கிரம் கெட்டு போகாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கலாம்.

பால் காய்ச்ச மறந்து, அது திரிந்து போகும் என சந்தேகம் ஏற்பட்டால், ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)