செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?





செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

0

கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால் கத்திரிக்காய் அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் நீங்கும். 

செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?
இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை  கட்டுப்படுத்துவதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. கத்தரிக்காய் இதயத்தின் பலம் அதிகரிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் சர்க்கரை நோய் வராமல் தடுக்க கத்திரிக்காய் சாப்பிடுவது நல்லது.

கத்தரிக்காய் என்று சொல்ல போனால் அதில் நிறைய வித விதமான உணவுகள் சமைக்கலாம். கத்தரிக்காயில் எந்த உணவு செய்தாலும் அது அருமையான ருசியில் இருக்கும்.

கததரிக்காயை வைத்து விதவிதமான கறிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.

எஸ்ப்ரஸோ பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை !

தேவையான பொருட்கள் . :

கத்தரிக்காய் - 6

சின்ன வெங்காயம் - 1 கப்

நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்

தக்காளி - 2

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள்- அரை தேக்கரண்டி

மல்லி தூள் - 3 தேக்கரண்டி

புளிச்சாறு - 3 தேக்கரண்டி

எண்ணெய் - அரை கப்

கடுகு - அரை தேக்கரண்டி

வெந்தயம் - அரை தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

பூண்டு - 6 பல்

வெல்லம் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

டிஜிட்டல் கேமரா எப்படி வேலை செய்கிறது?

செய்முறை . :

செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி?

முதலில் கத்தரிக்காயை எடுத்து காம்போடு சேர்த்து இரண்டு பக்கமாக வெட்ட வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், 

மல்லி தூள், உப்பு மற்றும் புளிச்சாறு போன்றவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து வெட்டிய கத்தரிக்காயின் உள்ளே தடவி ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணைய் ஊற்றி, கத்தரிக்காயை வறுத்து எடுக்க வேண்டும். கத்தரிக்காய் வெந்ததும் அதை எடுத்து தனியே வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள் ,கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் நறுக்கியது, மற்றும் நறுக்காதது, பூண்டு நசுக்கியது, தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

கேக் செய்ய பேக்கிங் ஓவன் தேவையில்லை குக்கரில் செய்வது எப்படி?

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு பின்னர் கரைத்த புளியை இட்டு நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி குழம்பு நன்றாக கொதிக்கும் சமயத்தில் வறுத்த கத்தரிக்காயை அதில் போட்டு 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும். கத்தரிக்காய் நன்றாக வெந்து இருக்கும் சமயத்தில் எடுத்து சாதத்துடன் பரிமாறலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)