டேஸ்டியான ஸ்பானிஷ் சூரோஸ் செய்வது எப்படி?





டேஸ்டியான ஸ்பானிஷ் சூரோஸ் செய்வது எப்படி?

0

மைதா என்பது நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. மைதா என்பது முளை நீக்கப்பட்ட, எந்த நார்ச்சத்தும் விட்டமின்களும் இல்லாத இரசாயன பொருட்கள் கலந்த ஒரு மாவு பொருள். 

டேஸ்டியான ஸ்பானிஷ் சூரோஸ் செய்வது எப்படி?
கோதுமையிருந்து தவிடை நீக்கிய பிறகு தான் கோதுமை மாவு கிடைக்கிறது. மைதா மாவில் செய்யப்படும் அனைத்து பலகாரங்களும் நமக்கு தீங்கு விளைவிக்கிறது. இது நமது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

ரத்தம் குடிக்கும் வவ்வால்கள் தெரியுமா? 

மைதா மாவு மிருதுவாகவும் பளீச் என வெள்ளையாகவும் இருக்க ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு பிளீச் செய்யப்படுகிறது.

சூறோஸ் ஸ்பெயின் நாட்டில் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இதை முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் ஸ்பெயினில் உள்ள ஆடு மேய்பவர்களே. 

சூறா இன ஆடுகளின் கொம்புகளின் வடிவத்தில் இருப்பதால், இந்த இனிப்பிற்கு சூறோஸ் என்று பெயர் வந்தது என்று கூறப்படுகிறது. 

தேவையான பொருட்கள் . :
மைதா மாவு - 125 கிராம் 

நெய் - 2 தேக்கரண்டி. 

சர்க்கரை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி. 

செய்முறை . :டேஸ்டியான ஸ்பானிஷ் சூரோஸ் செய்வது எப்படி?

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு 250 கிராம் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 2 தேக்கரண்டி நெய், 2 தேக்கரண்டி சக்கரை, கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து தண்ணீரை 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். 

இப்போது தண்ணீரை இறக்கி விட்டு அதில் ஒரு கப் மைதா மாவு சேர்க்க வேண்டும். மாவை சேர்த்தவுடன் கட்டி இல்லாமல் நன்றாக கலந்து விட வேண்டும்.

இப்போது மாவை ஒரு பவுலில் மாற்றி விட்டு அதை கைகளால் நன்றாக பிசைய வேண்டும். இப்போது மாவு தயார். 

ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் தெரியுமா?

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி தயாராக வைத்திருக்கும் மாவை பைப்பிங் பேக்கில் போட்டு சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுக்க வேண்டும். 

நன்றாக கோல்டன் பிரவுன் கலர் வந்ததும் அதனை எடுத்து விட வேண்டும். சக்கரையை மிக்சியில் போட்டு கொர கொரப்பாக பவுடர் செய்துகொள்ள வேண்டும். 

இப்போது ஒரு பவுலில் கால் கப் சக்கரை, அத்துடன் கால் தேக்கரண்டி ஏலக்காய்த்தூள் சேர்த்து விட்டு இரண்டையும் நன்றாக கலந்து விட்டு பொரித்து வைத்திருக்கும் சூறோசை அதில் போட்டு பிரட்டி எடுக்க வேண்டும். 

இப்போது சுவையான சூறோஸ் தயார். 

இதை நியூட்ரெல்லா அல்லது கட்டியான சாக்லேட் சாசுடன் பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும். இனி சூறோஸை வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்க, விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)